https://m.facebook.com/story.php?story_fbid=944633869061195&id=100005437712190
தேடுங்கள்
Sunday, January 13, 2019
Friday, December 28, 2018
கலைமாமணியும் ஆசிரியரும்
கலைமாமணி புஷ்பவனம் டாக்டர் ஐயா அவர்கள் " ஏழைகளின் ஏந்தல் " என்ற தலைப்பில் கவிதை எழுதிய வேதாரண்யம் சர்வகட்டளை
ப.இராஜரெத்தினம் அவர்களை நேரில் சந்தித்து உரையாடினார். இராஜரெத்தினம் ஆசிரியர் அவர்கள்
திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். இது ஆசிரியர் சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.
பூவினும் மெல்லிய மனம் புஷ்பவனம்
_____________________
பூவினும்
மெல்லியமனம்
புஷ்பவனம்
_____________________
ப.இராஜரெத்தினம்
9047187029
6379037057
_____________________
குப்புசாமி
அண்ணனே
இதய
மன்னனே
புஷ்பவனம்
தந்த
பொன்மனம்
உருகி
நிற்கிறது
என்
மனம்
கத்தும்
கடலோரம்
பிறந்தவரே
இதயத்தில்
ஈரம்
சுரந்தவரே
புல்லுக்கும்
கருணை
காட்டும்
புனிதரே
சிறு
கல்லுக்கும்
ஒளி
கூட்டும்
மாமனிதரே
உன்
உடல்
மட்டும்
இருந்தது
சென்னையில்
உன்
உயிர்
இருந்தது
ஏழை
வீட்டு
திண்ணையில்
உன்
பண்ணால்
தானே
பல
ஆயிரம்
உயிர்
பிழைத்தது
உன்னால்
தானே
இந்த
மின்மினி
பூச்சிக்கும்
சிறகு
முளைத்தது
இன்பத்தில்
பாட்டெடுக்க
இப்புவியில்
பலர்
இருந்தார்
துன்பத்தில்
பங்கெடுக்க
உன்னை
தவிர
யார்
இருந்தார்
கஜாவால்
காவிரி
படுகை
ஆனது
படு
நாசம்
அதனால்
தானே
எமக்கு
தெரிகிறது
முற்றத்து
முல்லையே
உன்
வாசம்
நீ
கள்ளி
காட்டில்
படர்ந்த
வேர்
மறை
காட்டில்
இருக்கு
உனக்கு
நல்ல
பேர்
கலை
எல்லாம்
கானமாய்
கொண்டு
வந்து
சேர்
யார்
நிற்க
முடியும்
உன்
அன்புக்கு
நேர்
உன்
போல்
உருக
யார்
உண்டு
காமி
நீ
குப்புசாமி
இல்லை
எங்கள்
குலசாமி
நீ
தானே
எமக்கு
தந்தாய
உயிர்
மூச்சு
உன்
கானம்
கேட்ட
பின்
மறைந்து
போனது
பலரின்
பேச்சு
நீ
அண்ணாந்து
பார்க்கும்
கோபுரம்
உன்னை
பணிந்து
வணங்குகிறது
என்
சிரம்
ஏழைக்கும்
வெளிச்சம்
தந்த
ஆதவா
உன்
பெயரை
தினம்
தினம்
நான்
ஒதவா
பட்டி
காட்டு
வேதனையை
எத்தனை
பேர்
பாடினார்
இதற்கு
முன்னால்
விழி
ஜாடை
மட்டும்
காட்டு
காலம்
எல்லாம்
வருவேன்
உன்
பின்னால்....
____________________
89. சர்வகட்டளை
வேதாரண்யம்
614810
____________________
Friday, December 14, 2018
ஏழைகளின் ஏந்தல் புஷ்பவனம் குப்புசாமி
______________________
ஏழைகளின் ஏந்தல்
புஷ்பவனம்
குப்புசாமி
______________________
ப.இராஜரெத்தினம்
------------------------------------
நீ
மட்டும்
கதறவில்லை
என்றால்
எங்கள்
குரல்
உலகுக்கு
எட்டி
இருக்காது
உன்
உடல்
மட்டும்
பதறவில்லை
என்றால்
எங்கள்
கண்ணீர்
இன்னும்
வற்றி
இருக்காது
கடை
கோடிக்கும்
கருணை
காட்டிய
கலைஞனே
எங்கள்
துயரை
தூர
விரட்டிய
கவிஞனே
திக்கற்ற
மக்களின்
கண்
காணா
உருவமே
அன்னை
தெரசாவின்
இன்னொரு
வடிவமே
பிறந்த
இடம்
மறக்காத
அருமை
புதல்வனே
கதறும்
இதயங்களில்
இன்று
நீ
முதல்வனே
அப்போது
உன்
குரலில்
தேன்
இருக்கும்
ரசித்திருக்கிறோம்
இப்போது
ஊன்
உருக்கும்
வலி
இருந்ததே
விழித்து
நிற்கிறோம்
அழுதாலும்
ஏழை
சொல்
அம்பலத்தில்
ஏறாது
எட்டாத
உயரம்
சென்றாலும்
உன்
அன்பு
மாறாது
நீ
உண்ணவில்லை
நீ
உறங்கவில்லை
பால்ய
காலத்தை
மறக்கவில்லை
வறுமை
நிலையை
மறைக்கவில்லை
யார்
யாருக்கோ
கொடி
பிடித்தோம்
யார்
யாருக்கோ
வெடி
வெடித்தோம்
கஜா
தந்தது
பெரிய
அடி
எம்
வாழ்வில்
விழுந்தது
பெரிய
இடி
நீ
தானே
தந்தாய்
தாய்
மடி
குரலற்ற
மக்களின்
அன்பை
ஒன்றாய்
சேர்த்து
மடியில்
பிடி
தென்னையில்
விழுந்த
எங்கள்
மூச்சை
சென்னையில்
மீட்டவரே
மாளாத
துயருக்கு
மருந்து
போட்டவரே
உன்னை
பிள்ளையாய்
பெற
என்ன
தவம்
செய்தாளோ
உன்
தாய்
உன்னை
என்றும்
மறக்க
மாட்டோம்
நாங்கள்
நன்றி
மறவா
சேய்
மறைக்காட்டு
மண்ணுக்கு
நீ
ஒரு
உதாரணம்
உன்னால்
தானே
கிடைத்தது
ஏகப்பட்ட
நிவாரணம்
வள்ளல்
இதயங்களுக்கும்
கருணை
உள்ளங்களுக்கும்
சேர்ந்து
கட்டுவோம்
நன்றி
என்னும்
தோரணம்
தேசிய
கீதம்
கூட
மறந்து
போனது
உன்
இதய
கீதமே
கிராமத்தின்
தேசிய
கீதம்
ஆனது
பட்டிக்காட்டுக்கு
யார்
கொடுப்பார்
குரல்
எம்
விழி
நீர்
துடைத்தது
உன்
விரல்
இதயம்
மயக்கும்
கிராமத்து
கீதமே
எங்கள்
உயிரில்
கலந்து
விட்ட
ஐந்தாம்
வேதமே
நீ
மண்ணை
முட்டி
முளைத்திட்ட
விதை
உனக்கு
தானே
தெரியும்
கிராமத்தின்
கதை
ஊரோடு
பின்னி
பிணைந்தது
உன்
சதை
உன்
மனம்
பொறுக்குமா
அவர்கள்
படும்
வதை
ஒவ்வொரு
நிமிடமும்
உனக்கு
பரபரப்பு
உன்னை
பாடகனாய்
பெற்றது
எங்கள்
வாழ்வின்
சிறப்பு
தடுக்கி
விழுந்த
எமக்கு
கை
கொடுத்தாய்
இதயம்
பட்ட
ரணத்தை
பாட்டால்
துடைத்து
எடுத்தாய்
குருதி
எல்லாம்
ஒன்றாய்
சேர்த்து
கண்ணீராய்
வடித்தாய்
அன்பையும்
பாசத்தையும்
எந்த
கிராமத்து
பள்ளியில்
நீ
படித்தாய் ?
_____________________
ப.இராஜரெத்தினம்
89. சர்வகட்டளை
வேதாரண்யம்
614810
_____________________
Wednesday, November 21, 2018
கண்ணீர் சிந்தும் பேட்டி
கீழே உள்ள லிங்கை தொட்டு வீடியோ பார்க்கவும்
https://m.facebook.com/story.php?story_fbid=912703758920873&id=100005437712190