தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி
Showing posts with label தேர்வு. Show all posts
Showing posts with label தேர்வு. Show all posts

Friday, July 19, 2019

10,11,12 ஆம் வகுப்புக்கான தேர்வு கால அட்டவணை

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான exam time table for 2019-2020 பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு...!


சென்னை: 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-2020 ஆம் கல்வி ஆண்டில், நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்வுகளான பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றுக்கான கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 24 ஆம் தேதியன்று முடிவடைகிறது.

பதினொன்றாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26 ஆம் தேதி நிறைவடைகிறது. 

மார்ச் 17 ஆம் தேதி துவங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவடைகிறது.

தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி:
     ஏப்ரல் 24 ஆம் தேதியன்று 12 ஆம் வகுப்புக்கும்,
     11ஆம் வகுப்புக்கு மே 14 ஆம் தேதியும்,
      மே 4 ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும்
தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை: 

17.03.2020 - மொழித்தேர்வு - முதல் தாள்

19.03.2020 - மொழித்தேர்வு - இரண்டாம் தாள்

21.03.2020 - விருப்பமொழிப் பாடம்

27.03.2020 - ஆங்கிலம் - முதல் தாள்

30.03.2020 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

02.04.2020 - கணிதம்

07.04.2020 - அறிவியல்

09.04.2020 - சமூக அறிவியல்

பிளஸ் 1 பொதுத்தேர்வு கால அட்டவணை: 

04.03.2020 - மொழிப்பாடம்

06.03.2020 - ஆங்கிலம்

11.03.2020 - கணக்கு, வணிகவியல், விலங்கியல்

13.03.2020 - கணினி அறிவியல்

18.03.2020 - இயற்பியல், பொருளாதாரம்

23.03.2020 - உயிரியல், வரலாறு, தாவரவியல்

26.03.2020 - வேதியல், கணக்குப்பதிவியல், புவியியல்

பிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணை: 

02.03.2020 - மொழிப்பாடம்

05.03.2020 - ஆங்கிலம்

09.03.2020 - கணக்கு, வணிகவியல், விலங்கியல்

12.03.2020 - கணினி அறிவியல்

16.03.2020 - இயற்பியல், பொருளாதாரம்

20.03.2020 - உயிரியல். வரலாறு, தாவரவியல்

24.03.2020 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி

🇮
   அரசு பள்ளி மாணவர்களுக்கு புனேயில் நீட் தேர்வு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு.

    பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள நீட் மற்றும் ஜேஇஇ போட்டி தேர்வுகளுக்கு 2019-20ம்  கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களை திறம்பட தயார் செய்வதற்காக ஓராண்டு பயிற்சியை புனேயில் உள்ள தக்‌ஷனா என்ற நிறுவனம் வழங்க உள்ளது.இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களாக இருக்கவேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.  ஓராண்டு புனேவில் உள்ள தக்‌ஷனா நிறுவனத்தில் தங்கி பயில விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். உணவு, விடுதி வசதி, பயிற்சி கட்டணம் அனைத்தும் இலவசம்.

   மாணவர்களின் பெற்றோரிடமிருந்து விருப்ப கடிதத்தை அப்பள்ளி தலைைமையாசிரியர் பெறவேண்டும். ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் என தேர்வு செய்து இம்மாதம் 22ம் தேதிக்குள் கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். டிசம்பர் 8ம் தேதி  தக்‌ஷனா நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வு மூலம் மாணவர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த சுவரொட்டியை பள்ளி தகவல் பலகையில் வைக்கவேண்டும் .

Monday, December 03, 2018

திறனாய்வு தேர்வு அறிவிப்பால் குழப்பம்

*திறனாய்வு தேர்வு அறிவிப்பால் குழப்பத்தில் மாணவர்கள்*

*அரையாண்டு தேர்வு நேரத்தில் தேசிய திறனாய்வு தேர்வை அறிவித்துள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்*

*எட்டாம் வகுப்பு படிக்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகைக்கான தேசிய திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.ஏழாம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்*

*ஏழாம் வகுப்பு முழு பாடத்திட்டம், எட்டாம் வகுப்பில் காலாண்டு வரையிலான பாடத்திட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 வீதம் பிளஸ் 2 வரை உதவித்தொகை வழங்கப்படும்*

*அரசு தேர்வுகள் இயக்ககம் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.1ல் நடக்க இருந்த திறனாய்வு தேர்வு கஜா புயல் பாதிப்பால் டிச.15ல் நடக்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.அரையாண்டு தேர்வு டிச.10ல் தொடங்கி, 22-ல் முடிகிறது*

*தேர்வுகளுக்கு இடையில் திறனாய்வு தேர்வை வைத்துள்ளதால், மாணவர்கள் எந்த தேர்வுக்கு படிப்பது என குழம்பியுள்ளனர். எனவே, அரையாண்டு முடிந்த பிறகு விடுமுறை நாளிலோ, அல்லது ஜனவரி மாதத்திலோ இந்த தேர்வை வைக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது*

*SOURCE DINAMALAR WEBSITE*

Sunday, December 02, 2018

அரையாண்டுத் தேர்வு அட்டவணை

*அரையாண்டுத் தேர்வு அட்டவணை *

(உயர்நிலை/மேல்நிலை பள்ளிகள்) தொடக்கம் - 10.12.18*

👉🏼 *தொடக்க/ நடுநிலை பள்ளிகள் - இரண்டாம் பருவத்தேர்வு*

*>17.12.2018- தமிழ்*

*>18.12.2018- ஆங்கிலம்*

*>19.12.2018- கணக்கு*

*>20.12.2018- அறிவியல்*

*>21.12.2018- சமூகவியல்*

*>22.12.2018*
*சனி பள்ளி வேலை நாள்.*

👉🏼 *23.12.2018 முதல்*
*01.01.2019 வரை* *அரையாண்டு விடுமுறை..*

👉🏼 *02.01.2019*
*பள்ளி மீண்டும் திறப்பு*

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture