தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Friday, July 19, 2019

10,11,12 ஆம் வகுப்புக்கான தேர்வு கால அட்டவணை

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான exam time table for 2019-2020 பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு...!


சென்னை: 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-2020 ஆம் கல்வி ஆண்டில், நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்வுகளான பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றுக்கான கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 24 ஆம் தேதியன்று முடிவடைகிறது.

பதினொன்றாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26 ஆம் தேதி நிறைவடைகிறது. 

மார்ச் 17 ஆம் தேதி துவங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவடைகிறது.

தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி:
     ஏப்ரல் 24 ஆம் தேதியன்று 12 ஆம் வகுப்புக்கும்,
     11ஆம் வகுப்புக்கு மே 14 ஆம் தேதியும்,
      மே 4 ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும்
தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை: 

17.03.2020 - மொழித்தேர்வு - முதல் தாள்

19.03.2020 - மொழித்தேர்வு - இரண்டாம் தாள்

21.03.2020 - விருப்பமொழிப் பாடம்

27.03.2020 - ஆங்கிலம் - முதல் தாள்

30.03.2020 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

02.04.2020 - கணிதம்

07.04.2020 - அறிவியல்

09.04.2020 - சமூக அறிவியல்

பிளஸ் 1 பொதுத்தேர்வு கால அட்டவணை: 

04.03.2020 - மொழிப்பாடம்

06.03.2020 - ஆங்கிலம்

11.03.2020 - கணக்கு, வணிகவியல், விலங்கியல்

13.03.2020 - கணினி அறிவியல்

18.03.2020 - இயற்பியல், பொருளாதாரம்

23.03.2020 - உயிரியல், வரலாறு, தாவரவியல்

26.03.2020 - வேதியல், கணக்குப்பதிவியல், புவியியல்

பிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணை: 

02.03.2020 - மொழிப்பாடம்

05.03.2020 - ஆங்கிலம்

09.03.2020 - கணக்கு, வணிகவியல், விலங்கியல்

12.03.2020 - கணினி அறிவியல்

16.03.2020 - இயற்பியல், பொருளாதாரம்

20.03.2020 - உயிரியல். வரலாறு, தாவரவியல்

24.03.2020 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture