தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி
Showing posts with label vairathamizhmani.blogspot.com. Show all posts
Showing posts with label vairathamizhmani.blogspot.com. Show all posts

Friday, November 02, 2018

பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு

*ஏன்?*
*எதற்கு?*
என,
*சிந்தித்ததுண்டா?*

*தனியார் பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு?*

*நல்ல வேலைக்கு போகவா?*
*ஆங்கிலம் சரளமாக பேசவா?*
*குடும்பக் கௌரவத்தைக் காக்கவா??*

*ஏன்?*
*எதற்கு?*
*என்று சிந்தித்ததுண்டா??*

*Pre kg 25000 ல் துவங்குகிறது*
*Lkg 40000*
*Ukg 50000*
*1st.60000*
*2ND 70000*
*3D. 80000*
*4TH 90000*
*5TH 100000*
*6TO8 1.20000*
*9TO10. 150000*
*11TO12 200000 லட்சம் ஆக மொத்தம்*
*9,85,000 ரூபாய். 

            இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில் இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க.*

*சரி!*
*இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?*

*உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம்* *மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்*

*அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?*

*ஒன்றை நினைவில் வையுங்கள்.  உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்கு கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவழித்து??*

*தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ வரமுடியுமா?*

*சரி!*
*இப்போது அவர்களால் மருத்துவராகவோ, பொறியாளராகவோ படிக்க இயலவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சேர்ப்பீர்கள்?*
*CBSE கல்லூரியிலா??*
*அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே??*

*அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தான் இல்லையா?*
*இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,*
*மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா?*

*இல்லை!*
*இல்லவே இல்லை!*
*இப்போது உங்கள் பிள்ளைகளோடு,அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களும் சேர்ந்தே படிப்பார்கள் என்பதை உணருங்கள்.?*

*பத்து லட்சத்திற்கு மேல் செலவழித்து படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியை பணமே செலவழிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்கள் பிடிக்கவில்லையா?*

*இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி கடைசியில் ஏமாளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?*
*உங்கள் பிள்ளை சாதனையாளனா?*

*இல்லை பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?*

*உங்களுக்கு தெரியுமா?*
*TNPSC தேர்வில் தேர்வாகும் 99 சதவீதப்பேர் அரசுப்பள்ளியில் தமிழில் படித்தவர்கள் என்று?*

*TET தேர்வில் வெற்றி பெற்று  அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்று?*

*இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?*

*ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்?*

*உங்களால் ஆணித்தரமாக எடுத்துக்கூற முடியுமா? CBSE ,மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?*

*அந்த பள்ளிகளை பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்கலாம் ??*

*இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்  அன்புப் பெற்றோர்களே?*
*அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள், அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்??*

*வாருங்கள் குரல் கொடுப்போம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள்(உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் கடைநிலை அலுவலக ஊழியர்களின் பிள்ளைகள் வரை) அரசுப்பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்ற சட்டம் இயற்ற குரல் கொடுப்போம்.*

*அப்படி சட்டம் இயற்றுவார்களா?*
*இயற்றினால் என்ன நடக்கும்?*
*அரசுப்பள்ளியில் அமைச்சர் மகனுடனும், கலெக்டர் மகனுடனும் நம்பிள்ளைகளும் படிப்பார்கள்.*
*கட்டட வசதிகள் அதிகமாகும்.*
*சத்துணவு சத்தான உணவாகும்.*
*நவீன  முறையில் பாடங்கள் கற்பிக்கப்படும்.*
*நம் செலவுகள் குறைக்கப்பட்டு நம் எதிர்காலத்திற்காக பணம் சேமிக்கப்படும்.*

*சிந்திப்போம்!*
*மற்றவரின் சிந்தனையைத் தூண்டுவோம்!*
*என்றும் அன்புடன்,*
*அரசு பள்ளி நலன் விரும்பி*

vairathamizhmani.blogspot.com                        


கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture