தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி
Showing posts with label குழப்பம். Show all posts
Showing posts with label குழப்பம். Show all posts

Monday, December 03, 2018

திறனாய்வு தேர்வு அறிவிப்பால் குழப்பம்

*திறனாய்வு தேர்வு அறிவிப்பால் குழப்பத்தில் மாணவர்கள்*

*அரையாண்டு தேர்வு நேரத்தில் தேசிய திறனாய்வு தேர்வை அறிவித்துள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்*

*எட்டாம் வகுப்பு படிக்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகைக்கான தேசிய திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.ஏழாம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்*

*ஏழாம் வகுப்பு முழு பாடத்திட்டம், எட்டாம் வகுப்பில் காலாண்டு வரையிலான பாடத்திட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 வீதம் பிளஸ் 2 வரை உதவித்தொகை வழங்கப்படும்*

*அரசு தேர்வுகள் இயக்ககம் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.1ல் நடக்க இருந்த திறனாய்வு தேர்வு கஜா புயல் பாதிப்பால் டிச.15ல் நடக்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.அரையாண்டு தேர்வு டிச.10ல் தொடங்கி, 22-ல் முடிகிறது*

*தேர்வுகளுக்கு இடையில் திறனாய்வு தேர்வை வைத்துள்ளதால், மாணவர்கள் எந்த தேர்வுக்கு படிப்பது என குழம்பியுள்ளனர். எனவே, அரையாண்டு முடிந்த பிறகு விடுமுறை நாளிலோ, அல்லது ஜனவரி மாதத்திலோ இந்த தேர்வை வைக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது*

*SOURCE DINAMALAR WEBSITE*

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture