75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறைகள்!
தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் வரும் ஆகஸ்ட் 14 ம் தேதி சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது பின்பற்ற பட வேண்டிய வழிமுறைகள் குறித்து தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தொடக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை :
இந்தியாவில் ஆண்டு தோறும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்தாண்டு நாட்டின் 75 ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. தற்போது கொரோனா தீவிரமெடுத்து பரவி வருவதால் தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களும் சுதந்திர தின விழாவின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
OLA & சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகஸ்ட் 15ல் அறிமுகம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அதில் அனைத்து பள்ளிகளிலும், அலுவலகங்களில் சுதந்திர தின விழாவின் போது தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாட வேண்டும். கொரோனா தடுப்பு பணியின் முன்கள பணியளர்களை விழாவிற்கு அழைத்து அவர்களை சிறப்பிக்க வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்டு தொற்றிலிருந்து மீண்டவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து சிறப்புரை ஆற்ற அனுமதிக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
அதனை தொடர்ந்து தேசிய கொடியினை காட்சிப்படுத்தும் போது நெகிழியை பயன்படுத்த கூடாது. நிகழ்ச்சியில் பங்கு பெரும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் விழாவின் போது கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறைகள்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3jwIJNR
via IFTTT
No comments:
Post a Comment