தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Saturday, August 07, 2021

OLA & சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகஸ்ட் 15ல் அறிமுகம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

OLA & சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகஸ்ட் 15ல் அறிமுகம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவைகள் அதிகரித்து வருகின்ற சூழலில் பிரபல ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் ஸ்கூட்டர் உள்ளிட்ட 2 வகையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மின்சார வாகனம்

மக்களின் அன்றாட தேவைகளில் வாகனங்கள் ஒரு முக்கியமான இடத்தை வகித்திருக்கிறது. இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையில் தினசரி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பலரும் மின்சார வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ளனர். அந்த வகையில் மலிவு விலையிலான மின்சார வாகனங்களை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி எலக்ட்ரிக் மற்றும் சிம்பிள் எனர்ஜி ஆகிய இரு மின்சார ஸ்கூட்டர்களும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.

ஒப்பந்த மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் – அமைச்சர் விளக்கம்!

இதற்கு முன்னதாக ஓலா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவை கடந்த மாதத்தில் துவங்கியது. இந்த முன் பதிவு ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே சுமார் 1 லட்சம் வாடிக்கையாளர்கள் அதில் பதிவு செய்திருந்தனர். தவிர முன்பதிவு கட்டணமாக ரூ.499 மட்டும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்டது. அடுத்ததாக சிம்பிள் எனர்ஜி என்ற ஸ்கூட்டரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அறிமுகமாக இருக்கிறது.

இந்த சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்தால் 240 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது என அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாஸ் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பொருத்தளவு ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஃபாஸ்ட் சார்ஜ் உதவியுடன் இவ்வாகனங்களை 18 நிமிடங்கள் மட்டுமே சார்ஜ் செய்தால் கிட்டத்தட்ட 75 கிமீ தூரம் வரை இதனை இயக்க முடியும்.

TN Job “FB  Group” Join Now

இதனிடையே ஓலா வாகனம் ரூ .80,000 முதல் ரூ.1,00,000 வரையும், சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் 1,10,000 முதல் 1,20,000 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதன் இறுதி விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த இரு மின்சார வாகனங்களின் மாடல்களை பொருத்தளவு, ஓலா ஸ்கூட்டர் 45 கிமீ வேகத்தில் ஒரு அடிப்படை மாடல், 70 கிமீ வேகத்தில் ஒரு மாடல் மற்றும் 95 கிமீ வேகத்தில் ஒரு டாப் மாடலுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் 3.6 வினாடிகளில் 0 முதல் 50 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகவும், அதன் 4.8 kWh லித்தியம் அயன் பேட்டரி மூலம் 100 கிமீ வேகத்தை கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post OLA & சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகஸ்ட் 15ல் அறிமுகம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3jAFyo6
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture