தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி
Showing posts with label ExamsDaily Tamil. Show all posts
Showing posts with label ExamsDaily Tamil. Show all posts

Tuesday, August 10, 2021

ஆன்லைன் மூலம் வேலையின்மை சான்றிதழ் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

ஆன்லைன் மூலம் வேலையின்மை சான்றிதழ் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

தமிழகத்தில் வேலையின்மை சான்றிதழ் பெற்றுக் கொள்ளவதற்கு ஆன்லைன் மூலமே தற்பொழுது விண்ணப்பித்துக் கொள்ள முடியும். அதற்காக பயனர்கள் ரூ.60 மட்டுமே கட்டணமாக செலுத்த வேண்டும். இது குறித்த கூடுதல் விளக்கங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பம்

தற்போது அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் ஒருவர் இருக்கும் இடத்தில் இருந்தே பல வகையான சேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அந்த வகையில் ஆதார் விண்ணப்பம், புதுப்பித்தல், வங்கி சேவைகள், பரிமாற்றம், பான் விண்ணப்பம், அரசு சான்றிதழ் உட்பட பல சேவைகளை ஆன்லைன் வழியாகவே செய்து கொள்ள முடியும். அந்த வகையில் வேலையின்மை சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளும் ஆன்லைன் மூலமே மேற்கொள்ளும் வகையில் எளிதாக்கப்பட்டுள்ளது.

இலவச சமையல் எரிவாயு உஜ்வாலா 2.0 திட்டம் – பிரதமர் மோடி இன்று துவக்கி வைப்பு!

இதற்கான முக்கிய ஆவணங்களாக விண்ணப்பதாரரின் புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், தகுதி சான்றிதழ் மற்றும் பரிமாற்ற சான்றிதழ் ஆகியவை தேவைப்படும். இந்த ஆவணங்களை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  • முதலில், https://www.tnesevai.tn.gov.in/Citizen/ என்ற இணையதளத்தை திறக்கவும்.
  • அதில் புதிய பயனர் என்பதை தேர்வு செய்து உள்நுழையவும்.
  • இதில் கேட்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் சரியாக நிரப்பவும்.
  • பின்னர் அதில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
  • அதை உள்ளிட்டால் லாகின் ID உருவாகும்.
  • புதிய பக்கம் திறந்ததும் Department Wise என்பதில் Revenue Department என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • பிறகு Unemployment Certificate என்பதில் CAN register என கொடுக்கவும்.
  • இந்த CAN எண் தெரியாதவர்கள், அதே போர்டலில் பயனர் பெயர் மற்றும் தந்தை பெயரை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம்.
  • பின்னர் CAN எண்ணை கொடுத்ததும் உங்கள் விவரங்கள் கிடைக்கும்.

TN Job “FB  Group” Join Now

  • தொடர்ந்து கொடுக்கப்பட்ட படிவத்தில் உங்களது கல்வி மற்றும் பிற தகவல்களை பதிவு செய்யவும்.
  • பிறகு மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோட் செய்யவும்.
  • தொடர்ந்து Self Declaration படிவம் கொடுக்கப்படும்.
  • இதை பிரிண்ட் செய்து ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
  • இதற்காக ரூ.60 மட்டும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • இந்த விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டவுடன் சான்றிதழ் கிடைத்ததும் மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.
  • பின்னர் இந்த இணையதளத்திலேயே லாகின் செய்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post ஆன்லைன் மூலம் வேலையின்மை சான்றிதழ் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3yBIY0k
via IFTTT

இலவச சமையல் எரிவாயு உஜ்வாலா 2.0 திட்டம் – பிரதமர் மோடி இன்று துவக்கி வைப்பு!

இலவச சமையல் எரிவாயு உஜ்வாலா 2.0 திட்டம் – பிரதமர் மோடி இன்று துவக்கி வைப்பு!

உஜ்வாலா 1.0 திட்டத்தை தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கி, உஜ்வாலா 2.0 திட்டத்தை இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்ற உள்ளார்.

உஜ்வாலா 2.0:

உஜ்வாலா திட்டமானது ஏழை, எளிய மக்களுக்கு சமையல் எரிவாயு வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இதன் முதற்கட்டமாக உஜ்வாலா 1.0 திட்டம் 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டது. அதனால் பல்வேறு ஏழை, எளிய மக்கள் பயன்படுவதால் மேலும் சில பிரிவுகளும் இதில் இணைக்கப்பட்டன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு கொரோனா – 373 பேர் உயிரிழப்பு!

2018ம் ஆண்டு பட்டியலின / பட்டியல் பழங்குடி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தேயிலை தோட்டம், வனப் பகுதிகளில் வசிப்பவர்கள் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டதால், இந்த திட்டத்தின் இலக்கு 8 கோடி சமையல் எரிவாயுவாக மாற்றி அமைக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட நாட்களுக்கு முன்னதாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

உஜ்வாலா 1.0 திட்டத்தினை தொடர்ந்து 2021-22 நிதிநிலை அறிக்கையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. உஜ்வாலா 2.0 திட்டமானது இன்று துவங்கும் நிலையில் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 12:30 மணிக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post இலவச சமையல் எரிவாயு உஜ்வாலா 2.0 திட்டம் – பிரதமர் மோடி இன்று துவக்கி வைப்பு! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3AssYhx
via IFTTT

நிலக்கரி நிறுவனத்தில் 588 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை

நிலக்கரி நிறுவனத்தில் 588 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை

மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Management Trainee பணி இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Coal India Limited
பணியின் பெயர் Management Trainee
பணியிடங்கள் 588
கடைசி தேதி 09.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Coal India பணியிடங்கள் :

Management Trainee பணிகளுக்கு 588 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  1. Mining – 253 பணியிடங்கள்
  2. Electrical -117 பணியிடங்கள்
  3. Mechanical -134 பணியிடங்கள்
  4. Civil – 57 பணியிடங்கள்
  5. Industrial Engineering – 15 பணியிடங்கள்
  6. Geology -12 பணியிடங்கள்
Management Trainee வயது வரம்பு :

பதிவாளர்கள் 04.08.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் அதிகபட்சமாக 56 வயதிக்ரு மிகாமல் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Coal India கல்வித்தகுதி :
  • மற்ற பிரிவுகள் – பணிக்கு தொடர்புடைய Engineering பாடப்பிரிவுகளில் BE/ B.Tech/ B.Sc. (Engg.) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Geology – Geology அல்லது Applied Geology அல்லது Geophysics அல்லது Applied Geophysics ஆகிய பாடங்களில் M.Sc./ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CIL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Coal India தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Graduate Aptitude Test in Engineering (GATE) –2021 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

CIL விண்ணப்பக் கட்டணம் :
  • General (UR)/ OBC (Creamy Layer & Non-Creamy Layer)/ EWS – ரூ.1,180/-
  • SC / ST / PwD – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

திறமை மற்றும் தகுதி படைத்தோர் வரும் 09.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download CIL MT Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post நிலக்கரி நிறுவனத்தில் 588 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3yAbvmN
via IFTTT

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு கொரோனா – 373 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு கொரோனா – 373 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 28,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 373 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள்:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 28,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,19,98,158 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தபட்டு வருகிறது. நேற்று மட்டும் 54,91,647 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 51,45,00,268 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

இந்தியாவில் ஜூலை மாதத்தில் 1.6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – புதிய தகவல்!

அதனை தொடர்ந்து உயிரிழப்புகளும் இன்னும் குறையவில்லை. நேற்று மட்டும் புதிதாக 373 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மொத்தமாக நாட்டின் பலி எண்ணிக்கை 4.28 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்புகளை கட்டுப்படுத்த மக்கள் முடிந்த அளவு விரைவாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. மற்றொரு புறம் நேற்று ஒரே நாளில் 41,511 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இதன் மூலம் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,11,80,968 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,88,508 கொரோனா நோயாளிகள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரங்களை விட சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த தாக்குதலாக மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு கொரோனா – 373 பேர் உயிரிழப்பு! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3AxT9nf
via IFTTT

இந்தியாவில் ஜூலை மாதத்தில் 1.6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – புதிய தகவல்!

இந்தியாவில் ஜூலை மாதத்தில் 1.6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – புதிய தகவல்!

இந்தியாவில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் ஜூலை மாதத்தில் 1.6 கோடி வேலைவாய்ப்புகள் கூடுதலாக உருவாக்கப்பட்டதாகவும், சம்பள வேலைகளின் எண்ணிக்கை 3.2 மில்லியனாக குறைந்தது என்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது.

ஆய்வு தகவல்:

நடந்து முடிந்துள்ள ஜூலை மாதத்தில் இந்தியாவில் 1.6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேளாண் மற்றும் கட்டுமானத் துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்திய தொழில்துறையின் வீழ்ச்சியாக கருத்தப்படுகிறது. ஏனென்றால் சுமார் 18.6 மில்லியன் பேர் தங்களது அன்றாட தொழில்களை விட்டு, சிறு வணிகர்கள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றியுள்ளனர் என இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE) MD மற்றும் CEO மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய பயணிகள் விமானங்களுக்கு செப்.21 வரை தடை – கனடா அரசு அறிவிப்பு!

இவற்றில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது வேளாண் தொழிலில் சுமார் 11.2 மில்லியன் பேர் கூடுதலாக வேலை செய்து வருகின்றனர். சம்பள வேலைகளின் எண்ணிக்கையை பொருத்தளவு பெரும்பாலும் 3.2 மில்லியனாகக் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் வேளாண் துறைகளை பொருத்தளவு, ஜூலை இறுதிக்குள் பயிர்களின் விதைப்பு கடந்த மாதத்தை விட 5 சதவிகிதம் குறைவாக இருந்தது. அதாவது ஜூன் மாதத்தில் 19.5 மில்லியன் ஹெக்டேர்களுடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தில் 65.3 மில்லியன் ஹெக்டேர் அளவு மட்டுமே விதைக்கப்பட்டது.

இந்தியாவில் முக்கியமான தொழிலாக கருதப்படும் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் ஜூலை மாதத்தில் 16 மில்லியன் வேலைகள் கூடுதலாகக் காணப்பட்டன. இருப்பினும், அதே மாதத்தில் சம்பள வேலைகளின் எண்ணிக்கை 3.2 மில்லியனாகக் குறைந்தது என்று இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது. பொதுவாக வேளாண் துறையில் வேலைவாய்ப்புகள் என்பது ஜூலை மாதத்தில் உயரும். விவசாயப் பணிகளில் இந்த பருவகால உழைப்பு, பெரிய அளவில் தொழிலாளர்கள் இடம்பெயர்வதற்கு காரணமாக கருதப்படுகிறது.

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை இன்று வெளியீடு!

இருப்பினும் காரிஃப் விதைப்பு காலம் முடிவடையும் போது விவசாய தொழிலாளர்கள் இந்த வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். மேலும் குறிப்பிட்ட காலம் முடிவடையும் போது இந்த தொழிலாளர்களுக்கு போதுமான மாற்று வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று CMIE அமைப்பின் CEO வியாஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே ஜூலை மாதத்தில் கட்டுமானத் துறையில் கூடுதலாக 5.4 மில்லியன் மக்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும் உற்பத்தித் துறையில் 0.8 மில்லியன் மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். மேலும் தினசரி கூலித் தொழிலாளியின் சம்பள வேலை வாய்ப்புகள் 10 மில்லியனுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூட்டுறவு துறை உத்தரவு!

இவை கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையுள்ள மாதங்களில் 80 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் தினசரி கூலித் தொழிலாளியின் ஊதியங்கள் பல்வேறு வகையாக மாற்றமடைந்துள்ளது. இதன் விளைவாக, ஊரடங்கின் போது சம்பள வேலைகளில் நிலையான இழப்பின் ஒட்டுமொத்த தாக்கம் மற்றும் அதன் பின் விளைவுகள் மிகவும் மோசமாக உள்ளது. அந்த வகையில் இழந்த சம்பள வேலையை திரும்ப பெறுவது கடினம் என்றும் வியாஸ் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post இந்தியாவில் ஜூலை மாதத்தில் 1.6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – புதிய தகவல்! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3AyBk7D
via IFTTT

இந்திய பயணிகள் விமானங்களுக்கு செப்.21 வரை தடை – கனடா அரசு அறிவிப்பு!

இந்திய பயணிகள் விமானங்களுக்கு செப்.21 வரை தடை – கனடா அரசு அறிவிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவும் அச்சம் காரணமாக இந்திய விமானங்களுக்கான தடை வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

விமானங்களுக்கு தடை:

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. முழு ஊரடங்கை விதித்து மக்கள் நடமாடுவதை முற்றிலும் அரசுகள் தடை செய்து வருகிறது. அதனை தொடர்ந்து வெளிநாட்டு பயணிகள் மூலம் தொற்று மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தால் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு பல்வேறு நாட்டு அரசுகள் தடை விதித்து வருகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – கல்வித்துறை அறிக்கை!

குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், பிரான்ஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து கனடா அரசும் இந்திய பயணிகள் விமானத்திற்கு தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் டெல்டா வகை வைரஸ் அதிகம் பரவுவதால் கனடா அரசு ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்திய விமானங்களுக்கு தடையை அறிவித்திருந்தது. இந்த நிலையில் விமான தடை முடிவடையவுள்ளதால் கனடா அரசு மேலும் தடையை நீட்டித்துள்ளது.

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை இன்று வெளியீடு!

அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி வரை இந்திய பயணிகள் விமானத்திற்கான தடை நீடிக்கும் என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சரக்கு விமானத்திற்கு எவ்வித தடையும் இல்லை, வழக்கம் போல் இயங்கலாம் என்றும் கனடா அரசு தெரிவித்துள்ளது. மேலும் கனடாவில் கொரோனா நோய் பரவல் அதிகரிப்பதால் அந்நாட்டு மக்களுக்கு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனை தொடர்ந்து தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post இந்திய பயணிகள் விமானங்களுக்கு செப்.21 வரை தடை – கனடா அரசு அறிவிப்பு! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3fQmJMJ
via IFTTT

தமிழக அரசு பள்ளிகளில் 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – கல்வித்துறை அறிக்கை!

தமிழக அரசு பள்ளிகளில் 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – கல்வித்துறை அறிக்கை!

தமிழ்நாடு அரசு அல்லது நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி இயக்குனர் ஆணை வெளியிட்டுள்ளார்.

முதுகலை ஆசிரியர்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் சரியாக நடத்தாமல் கல்வி கட்டணம் மட்டும் வாங்குவதால், பலர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை இன்று வெளியீடு!

இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் படி, தமிழகத்தில் உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 2019-202 ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தேவை ஏற்படுவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 400 கூடுதல் பணியிடங்கள் தேவையுள்ள பணிகளுக்கு அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூட்டுறவு துறை உத்தரவு!

புதிதாக மேற்படி பள்ளிக்கு அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களை சார்ந்த அளவுகோல் பதிவேட்டில் பதிவுகளை மேற்கொண்டு பராமரிக்குமாறு சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post தமிழக அரசு பள்ளிகளில் 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – கல்வித்துறை அறிக்கை! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3izcI8i
via IFTTT

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை இன்று வெளியீடு!

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை இன்று வெளியீடு!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் மற்றும் அரசு வெளியிட்ட மதிப்பீடு முறையிலான மதிப்பெண்களின் திருப்தி இல்லாத மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேர்வு அட்டவணை:

சிபிஎஸ்இ ஜூலை 12 ம் தேதி 12 ம் வகுப்பு தேர்வு முடிவையும், 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் 3, 2021 அன்றும் வெளியிட்டது. தங்கள் மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள் வாரியம் நடத்தும் நேரடி தேர்வுகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15, 2021 வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான மேம்பாடு மற்றும் துணைத் தேர்வுகளை நடத்த உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும் என கூறப்பட்டது.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூட்டுறவு துறை உத்தரவு!

2021 ஆம் ஆண்டின் மதிப்பீடு முறையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முடிவுகளில் திருப்தி அடையாத மற்றும் அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்த விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. CISCE வாரியத் தேர்வுகள் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கி அதற்கான முடிவுகள் செப்டம்பர் 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என கூறப்பட்டு உள்ளது.

நீட் தேர்வு 2021 விண்ணப்ப பதிவு – இன்றே கடைசி நாள்!

இந்த தேர்வு அட்டவணை https://www.cbse.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. 10, 12ம் வகுப்பு மாணவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே தமிழகத்தில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை இன்று வெளியீடு! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3s3gavh
via IFTTT

பெல் நிறுவனத்தில் வேலை – BE/B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் || 50 காலியிடங்கள் – தேர்வு இல்லை !

பெல் நிறுவனத்தில் வேலை – BE/B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் || 50 காலியிடங்கள் – தேர்வு இல்லை !

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ சிவில் இன்ஜினியரிங்கிற்கான பட்டதாரி இன்ஜினியரிங் அப்ரண்டிஸ் (Graduate Engineering Apprentice) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு 50 காலியிடங்கள் உள்ளன. தகுதியானவர்கள் 09/08/2021 முதல் 29/08/2021 வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Graduate Engineering Apprentice
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 29/08/2021
விண்ணப்பிக்கும் முறை Online
பெல் நிறுவன காலிப்பணியிடங்கள்:

Graduate Engineering Apprentice பிரிவில் Mechanical Engineering/ Computer Science Engineering/ Electronics Engineering/ Civil Engineering ஆகிய பதவிக்கு 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது,

  • Mechanical Engineering – 20
  • Computer Science Engineering – 10
  • Electronics Engineering – 10
  • Civil Engineering – 10
BEL Apprentices வயது வரம்பு:

இந்தப் பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு நவம்பர் 30, 2021ன் படி, 25 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் என தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BEL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் ஏஐசிடிஇ அல்லது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிடப்பட்ட பொறியியல் கிளைகளில் பிஇ/பி.டெக் படிப்பை நவம்பர் 30, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு முடித்திருக்க வேண்டும்.

பெல் நிறுவன சம்பள அளவு 2021:

தகுதியானவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதத்திற்கு ரூ.11,110/- வழங்கப்பட உள்ளது.

BEL பட்டதாரி பயிற்சியாளர் தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரரின் BE/B.Tech பட்டத்தின் இறுதி சதவீத மதிப்பெண்களின் அடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்ட இணைய முகவரி மூலம் 29/08/2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post பெல் நிறுவனத்தில் வேலை – BE/B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் || 50 காலியிடங்கள் – தேர்வு இல்லை ! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3s7dgp3
via IFTTT

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூட்டுறவு துறை உத்தரவு!

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூட்டுறவு துறை உத்தரவு!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் விடுமுறை நாட்களில், ஒரு நாள் மட்டும் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் மாதந்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கடைகளில் பணி செய்து வரும் ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என கூட்டுறவு துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மண்டல இணைப்பதிவாளருக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

நீட் தேர்வு 2021 விண்ணப்ப பதிவு – இன்றே கடைசி நாள்!

அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும், கடை விடுமுறை நாட்களில் ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில்‌ செயல்பட்டு வரும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களில்‌ இந்த வகுப்புகளை நடத்த வேண்டும்.

பார்வதியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்யும் விக்கி, காப்பாற்ற வரும் சரவணனன் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

தவிர தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநரின் செயல்முறைகளின் கீழ் பயிற்சியில் கலந்து கொள்பவர்களது பட்டியலை தயார் செய்து, அதில் எந்தவொரு நபரும் விடுபடாமல் பயிற்சியில் கலந்து கொள்வதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு பயணப்படி தொகையை கூட்டுறவு சங்க நிதியிலிருந்து வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூட்டுறவு துறை உத்தரவு! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3lM5Cj1
via IFTTT

நீட் தேர்வு 2021 விண்ணப்ப பதிவு – இன்றே கடைசி நாள்!


நீட் தேர்வு 2021 விண்ணப்ப பதிவு – இன்றே கடைசி நாள்!

தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட் 10) கடைசி நாள் ஆகும்.

நீட் தேர்வு:

தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படும். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு விண்ணப்ப பதிவு ஜூலை 13 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

பார்வதியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்யும் விக்கி, காப்பாற்ற வரும் சரவணனன் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட் 10) கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் இருப்பின் அதனை செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வு கூடுதல் மையங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வினாத்தாளிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post நீட் தேர்வு 2021 விண்ணப்ப பதிவு – இன்றே கடைசி நாள்! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3lKoK0N
via IFTTT

ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கைகளாக முழு ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில கூடுதல் செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்திருப்பதற்கு மத்தியில், 3 ஆம் அலையை எதிர்கொள்ளும் விதமாக மாநிலங்கள் தோறும் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் உத்தரகண்ட் மாநிலத்திலும் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு, இன்று (ஆகஸ்ட் 10) காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 6 மணி வரை அமல்படுத்தப்படும் என்று அரசாங்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வதியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்யும் விக்கி, காப்பாற்ற வரும் சரவணனன் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

மேலும் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், சுற்றுலா இடங்களுக்கு வரும் பார்வையாளர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊரடங்கு காலத்தில், மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இறுதிச் சடங்குகளில் அதிகபட்சமாக 50 பேர் கலந்துகொள்ள மாநில அரசு அனுமதித்துள்ளது.

புது பிசினஸிற்கு பெயர் பலகை மாட்டும் பாக்கியா, குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து முடிவு செய்த செழியன், ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” சீரியல்!!

இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் நீட்டித்தது. இந்த கட்டுப்பாடுகள் இன்றுடன் (ஆகஸ்ட் 10) முடிவடைந்ததால், இவை மேலும் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தவிர ஆகஸ்ட் 16 முதல் 6 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/2U9rzx4
via IFTTT

10 ஆம் வகுப்பு முடிந்தவரா? ரூ.56,900/- ஊதியத்தில் இந்தியக் கடற்படையில் வேலை!

10 ஆம் வகுப்பு முடிந்தவரா? ரூ.56,900/- ஊதியத்தில் இந்தியக் கடற்படையில் வேலை!

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள Civil Motor Driver மற்றும் Pest Control Worker பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் 26-08-2021 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்தியக் கடற்படை
பணியின் பெயர் Civil Motor Driver மற்றும் Pest Control Worker
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.08.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்தியக் கடற்படை காலிப்பணியிடங்கள்:

Civil Motor Driver – 10 காலியிடங்கள்

Pest Control Worker – 12 காலியிடங்கள்

இந்தியக் கடற்படை வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

Civil Motor Driver கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். HMV உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் 1 அனுபவம் இருக்க வேண்டும்.

Pest Control Worker கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியக் கடற்படை மாத ஊதியம்:

Civil Motor Driver – ரூ.19900 – ரூ.63200/-

Pest Control Worker – ரூ.18000 – ரூ.56900/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 26-08-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post 10 ஆம் வகுப்பு முடிந்தவரா? ரூ.56,900/- ஊதியத்தில் இந்தியக் கடற்படையில் வேலை! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/2VCcvbA
via IFTTT

பார்வதியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்யும் விக்கி, காப்பாற்ற வரும் சரவணனன் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

பார்வதியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்யும் விக்கி, காப்பாற்ற வரும் சரவணனன் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதியை தனியாக ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று தப்பாக நடக்க முயற்சி செய்கிறார் விக்கி, பின் தொடர்ந்து வந்து பார்வதியை காப்பாத்துகிறார் சந்தியா. அப்போது சரவணன் அங்கே வந்து காப்பாத்துகிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதி விக்கியை பார்த்து, வீட்டில் கல்யாண ஏற்பாடு செய்ததையும், அண்ணிக்கு நம்ம மீது சந்தேகம் வந்ததையும் சொல்லி புலம்புகிறார். சந்தியா பார்வதி மீது உள்ள சந்தேகத்தில் ஆட்டோவில் பின் தொடருகிறார். விக்கி தனது நண்பன் வீடு இருப்பதாக சொல்லி பார்வதியை தனியாக ஒரு வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

பார்வதி வர சம்மதம் தெரிவிக்காமல் இருந்தால் விக்கி இனிமேல் என்னிடம் பேசாதே என்று மிரட்டுகிறார். சந்தியா அதை பின் தொடர்ந்து வந்து பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார், பார்வதி தனியாக இருக்க சந்தியா கதவை மூடுவதை பார்த்து பயத்தில் சரவணனிடம் போன் செய்கிறார். விக்கி பார்வதியை அருகில் அமர வைத்து பேசுகிறார்.

புது பிசினஸிற்கு பெயர் பலகை மாட்டும் பாக்கியா, குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து முடிவு செய்த செழியன், ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” சீரியல்!!

எதற்கு கதவை மூடுகிறாய் என பார்வதி கேட்கிறார். விக்கி குடித்துள்ளதை பார்வதி கண்டுபிடிக்கிறார். பார்வதி உஷாராக நீ செய்வது சரி இல்லை என கத்துகிறார். நீ வீட்டிற்கு போனால் உனக்கு கல்யாணம் செய்து வைத்திருவார்கள். இப்போ தப்பு செய்துவிட்டால் வீட்டில் பேசிக்கொள்ளலாம் என சொல்ல பார்வதி முடியாது என சொல்கிறார்.

பார்வதியை பலவந்தமாக விக்கி பலாத்காரம் செய்ய முயற்சி செய்ய, சந்தியா கதவை திறக்க முயற்சி செய்கிறார். உன் கல்யாணத்தை நிறுத்த இதான் வழி என்று விக்கி சொல்கிறார். விக்கி மல்லுக்கட்ட பார்வதி விக்கியை அடித்து விடுகிறார், சந்தியா கதவை திறந்து உள்ளே வர பார்வதி சந்தியா பக்கம் வருகிறார். சந்தியாவை மீறி விக்கி பார்வதியை அழைக்க சந்தியா முடிந்தவரை தடுக்கிறார்.

உடனே அங்கே சரவணன் வர விக்கியை சரமாரியாக அடிக்கிறார். உன் தங்கச்சி சம்மதத்துடன் தான் செய்ததாக விக்கி சொல்கிறார். பார்வதி சரவணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, விக்கியை அடிக்கிறார். பார்வதியையும் உனக்காக சந்தியாவிடம் சண்டை போட்டேன் என திட்டுகிறார். இன்னொரு தடவை என் தங்கச்சியிடம் பிரச்சனை செய்தால் உன்னை உயிரோடு விடமாட்டேன் என சரவணன் சொல்லி அவனை அடித்துவிட்டு அங்கிருந்து செல்கின்றனர்.

கண்ணனை நினைத்து வருத்தப்படும் லட்சுமி அம்மா, நண்பனின் உதவியுடன் வீடு எடுக்கும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

பார்வதி அவனை காதலித்ததாக சொல்லவும், நீ முன்னாடியே எங்ககிட்ட சொல்லிருக்கலாம் என சொல்லி, இங்க நடந்த எல்லாத்தையும் கனவாக நினைத்து மறக்க வேண்டும் என சந்தியா சொல்கிறார். சரவணன் அடித்ததால் அவர் மீது விக்கி கோபத்துடன் இருக்கிறார். மூன்று பேரும் சேர்ந்து வர சிவகாமி கேள்வி கேட்கிறார். இது காலேஜ் முடியும் நேரம் இல்லை என சிவகாமி சந்தேகத்துடன் கேட்கிறார்.

சரவணன் பார்வதியை உள்ளே அனுப்பி சிவகாமியிடம் பொய் சொல்லி சமாளிக்கின்றனர். பார்வதிக்கு வயிற்று வலி அதான் சந்தியா காலேஜ் போய் அவளை கூட்டிட்டு வந்தா என சரவணன் பொய் சொல்லுகிறார். சிவகாமி சரவணனை அழைத்து என்கிட்ட பொய் சொல்லலையே என்று கேட்க சரவணனின் கையில் அடிபட்டுள்ளதை பார்த்து சிவகாமி சந்தேகத்துடன் கேட்கின்றனர். சிவகாமி அப்போதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். முன்னாடி ஊருக்கு போன அன்னைக்கு இப்படி தான் பொய் சொன்ன என சந்தேகப்படுகிறார்.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீர்ரகள் நாடு திரும்பினர் – மத்திய அரசு கௌரவிப்பு!

எனக்கு என்னமோ தப்பா இருக்கு என சிவகாமி சந்தேகப்படுகிறார். அவரது கணவர் எவ்வளவோ சமாதானம் செய்ய, நம்பாமல் இருக்கிறார். இவன் பொய் சொல்வது இதுவரை நல்லதுக்காக தான இருக்கு என சிவகாமி கணவர் சமாதானம் சொல்கிறார். விக்கி, சரவணனன் அடித்ததை நினைத்து கோவத்தில் இருக்கிறார். இவளுக்காக எவளோ நாள் நல்லவனா நினைத்தேன் தெரியுமா என்று பேசிக்கொண்டிருக்கிறார். எல்லாம் முடிஞ்சு போச்சு இதோட இதை விட்டுவிடு என விக்கியின் நண்பன் சொல்கிறார். ஆனால் விக்கி பயங்கர கோவத்தில் இருக்கிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post பார்வதியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்யும் விக்கி, காப்பாற்ற வரும் சரவணனன் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3CyBEVK
via IFTTT

முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 10

வி. வி. கிரி பிறந்த தினம்

பிறப்பு:

  • 10 ஆகஸ்ட் 1894ல் பிறந்தார்.

சிறப்பு:

  • இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி ஆவார்.
  • இந்திய தொடர்வண்டிதொழிலாளர்கள் பேரவையின் அதிபராகவும் மற்றும் அகில இந்திய தொழில்சங்க அவையின் அதிபராக இருமுறை பதவி வகித்தார்.
  • 1937ம் ஆண்டு தொழில் மற்றும் தொழிலாளர் அமைச்சர் ஆனார்.
  • 1942ம் ஆண்டு காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தபொழுது “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்துக்கு ஆதரித்து அவர் தொழிலாளர் இயக்கதுக்கே திரும்பினார். ஆங்கில அரசு அவரை சிறையில் தள்ளியது.
  • இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் இலங்கைக்கு உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
  • 1952ம் ஆண்டு சட்டசபைக்கு போட்டியிட்டார்.முதல் லோக் சபாவிற்கு பதபத்னம் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.
  • 1954ம் ஆண்டு ராஜினாமா செய்யும் வரை தொழிலாளர் மந்திரியாக பதவி வகித்தார்.
  • உத்தர பிரதேசம்(1957-1960),கேரளா(1960-1965) மற்றும் மைசூர்(1965-1967) மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றினார்.
  • 1967ம் ஆண்டு இந்தியாவின் துணை-அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாகிர் பதவிக் கால மரணத்தினால் 1969ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரை அதிபராக பணியாற்றினார்.
  • இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னாவை 1975ம் ஆண்டு பெற்றார் கிரி.
  • கிரி ஒரு திறன்வாய்ந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்.
  • இவர் “தொழில் நிறுவனங்களின் உறவுகள்” மற்றும் “இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர் பிரச்சனைகள்” போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார்.

இறப்பு:

  • 23 ஜூன் 1980ல் இறந்தார்.

சா. விசுவநாதன்பிறந்த தினம்

பிறப்பு:

  • ஆகஸ்ட் 10,1916ல் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் பிறந்தார்.

சிறப்பு:

  • சாவி என்ற புனைபெயரில் எழுதிய ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் இதழ் ஆசிரியர்.
  • தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர்.
  • கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
  • சாவியின் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதால் அவருடைய பல படைப்புகள் மின்னூல்களாகத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கிடைக்கின்றன.
  • ஞானபாரதி என்ற அமைப்பை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தொடங்கினார்.
  • கலைத்துறையிலும் இதழ்த் துறையிலும் முத்திரை பதித்தவர்களுக்கு ஞானபாரதி விருதும் பொற்கிழியும் அளித்துக் கௌரவித்து வந்தார்.

நூல்கள்:

  • திருக்குறள் கதைகள்
  • பழைய கணக்கு
  • வேதவித்து
  • கோமகனின் காதல்
  • உலகம் சுற்றிய மூவர்
  • நான் கண்ட நாலு நாடுகள்

நடத்திய இதழ்கள்:

  • வெள்ளிமணி
  • சாவி
  • பூவாளி
  • திசைகள்
  • மோனா

இறப்பு:

  • பிப்ரவரி 9, 2001ல் இறந்தார்.

நிகழ்வுகள்

  • 1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
  • 1948 – ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் (Atomic Energy Commission) துவக்கி வைத்தார்.
  • 1990 – மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 10 appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3lLHlcH
via IFTTT

புது பிசினஸிற்கு பெயர் பலகை மாட்டும் பாக்கியா, குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து முடிவு செய்த செழியன், ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” சீரியல்!!

புது பிசினஸிற்கு பெயர் பலகை மாட்டும் பாக்கியா, குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து முடிவு செய்த செழியன், ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” சீரியல்!!

விஜய் டிவி “பாக்கியாலட்சுமி” சீரியலில், பாக்கியா ஆரம்பிக்கும் புதிய பிசினஸ் பெயர் குறித்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். கோபி ராதிகாவிடம் தனது குடும்பம் பற்றி தவறாக பேசி அவரது மனதை மாற்றுகிறார். செழியனும், ஜெனியும் குழந்தை பெற்றுக் கொள்ளவது குறித்து முடிவு செய்கின்றனர்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவின் புதிய சமையல் வியாபாரத்திற்கு பெயர் முடிவு செய்கின்றனர். அப்போது ஈஸ்வரி சாப்பாடு என்று தான் வைக்கணும் என்று முடிவு செய்கின்றனர். எழில் பிசினஸ் தொடங்க புதிய போர்டு செய்து வருகிறார். அதை வீட்டு வாசலில் மாட்டி தனது அம்மாவுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.

கண்ணனை நினைத்து வருத்தப்படும் லட்சுமி அம்மா, நண்பனின் உதவியுடன் வீடு எடுக்கும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

கோபி, ராதிகாவும் காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி மயூரா குறித்து கேட்கிறார். எனக்கும் வாழ்க்கையில் எந்த சந்தோஷமும் இல்லை நான் என் பெண்ணுக்காக தான் வாழுறேன் என்று கோபி பொய் சொல்கிறார். அப்போது ராதிகாவின் கையை பிடிக்க ராதிகாவிற்கு ஒரு மாதிரி இருக்கிறது. பின்னர் கோபியை பற்றி ராதிகா மனதிலும் இரக்கம் வருகிறது.

கண்ணம்மா இரவு முழுவதும் வேலை செய்வதை பார்த்து வருத்தப்படும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

செழியனும் ஜெனியும் தனியாக பேச குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்று ஜெனி கேட்கிறார். இப்போதைக்கு வேண்டாம் சின்ன சின்ன ஆசைகள் எனக்கு இருக்கு அதெல்லாம் முடித்துவிட்டு பிறகு பெற்றுக் கொள்ளலாம் என செழியன் சமாதானம் சொல்கிறார். ஜெனியும் அதனை ஏற்றுக் கொள்கிறார். பிறகு எழில் அமிர்தா வீட்டிற்கு செல்ல அமிர்தா போனை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார். நானும் கணேஷ் சேர்ந்து வீடியோ எடுத்தோம் அதை பார்த்து சிரித்தேன் என்று சொல்ல நிறைய திறமைகள் உங்களுக்குள் இருக்கு என்று சொல்கிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post புது பிசினஸிற்கு பெயர் பலகை மாட்டும் பாக்கியா, குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து முடிவு செய்த செழியன், ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” சீரியல்!! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/2VHCdLE
via IFTTT

கண்ணனை நினைத்து வருத்தப்படும் லட்சுமி அம்மா, நண்பனின் உதவியுடன் வீடு எடுக்கும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

கண்ணனை நினைத்து வருத்தப்படும் லட்சுமி அம்மா, நண்பனின் உதவியுடன் வீடு எடுக்கும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் கல்யாணம் செய்ததால் மூர்த்தி வீட்டை விட்டு அனுப்புகிறார். கண்ணன் இப்படி செய்ததை நினைத்து லட்சுமி கதிரிடம் சொல்லி வருத்தப்படுகிறார். கண்ணனின் நண்பன் இருவரும் தங்க வைக்க உதவி செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனையும், ஐஸ்வர்யாவையும் வீட்டை விட்டு மூர்த்தி வெளியே அனுப்புகிறார். அனைவரும் வீட்டிற்குள் சென்று கதவை மூடிவிடுகிறார் மூர்த்தி. பின்னர் கண்ணன் வர மனமில்லாமல் இருக்க ஐஸ்வர்யா அவரை இழுத்து செல்கிறார். லட்சுமி கண்ணன் இருக்கும் ஞாபகத்தில் தன்னை உள்ளே கூட்டிட்டு போகும்படி சொல்கிறார்.

கதிர் உடனே உள்ளே கூட்டிட்டு போகிறார். கதிரிடம் சொல்லி லட்சுமி அழுகிறார். இப்படி செய்வேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்று வருத்தப்படுகிறார். கதிர் அவருக்கு சமாதானம் சொல்ல, கண்ணனும் ஐஸ்வர்யாவும் ரோட்டில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கின்றனர். கண்ணனின் நண்பன் பேசி ஒரு வீடு ஏற்பாடு செய்து தருகிறார்.

கண்ணம்மா இரவு முழுவதும் வேலை செய்வதை பார்த்து வருத்தப்படும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

தனத்தின் அம்மா தனத்தை நினைத்து வருத்தப்படுகிறார். 15 வருடம் கழித்து குழந்தை வந்துருக்கு ஆனால் அதற்கு ஒரு சந்தோசம் கூட இந்த குடும்பம் தரவில்லை என புலம்புகிறார். தனத்தை சாப்பிட கூப்பிட தனம் வர மறுக்கிறார். தனத்தின் அம்மா எவ்வளவோ எடுத்து சொல்கிறார். தனம் கவலை தாங்க முடியாமல் அழுகிறார். மூர்த்தி அதை பார்த்து வருத்தப்படுகிறார்.

இதுக்கு தான் மாப்பிள்ளை நான் அவளை அன்னைக்கே வீட்டிற்கு கூட்டிட்டு போறேன் என்று சொன்னேன். வீட்டில் யாருமே சாப்பிடவில்லை. சம்மந்தி அம்மா சாப்பிடவில்லை, கயல் கூட சாப்பிட வில்லை என்று சொல்கிறார். தனத்திடம் உன் குழந்தையை பற்றி உனக்கு நினைப்பே இல்லை அதை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்துகிறாய் என்று கேட்கிறார்.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

மூர்த்தி தனத்தை எந்திரிக்க சொல்லி, கதிரை அழைத்து வர சொல்கிறார். அனைவரிடமும் அவன் ஒருத்தன் பண்ண தப்பிற்கு வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிடாமல் வருத்தப்பட கூடாது. நம்ம யாரை பற்றி கவலைப்படாமல் அவன் சென்றான். இனிமேல் அவனை பற்றி யாரும் வருத்தப்பட கூடாது. எல்லாரும் போய் முதலில் சாப்பிடுங்கள் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post கண்ணனை நினைத்து வருத்தப்படும் லட்சுமி அம்மா, நண்பனின் உதவியுடன் வீடு எடுக்கும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3AsP9UZ
via IFTTT

கண்ணம்மா இரவு முழுவதும் வேலை செய்வதை பார்த்து வருத்தப்படும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

கண்ணம்மா இரவு முழுவதும் வேலை செய்வதை பார்த்து வருத்தப்படும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா நள்ளிரவில் வேலை செய்வதை பார்த்து பாரதி வருத்தப்படுகிறார். இது பற்றி கண்ணம்மாவிடம் கேட்க சவால் விட்டால் மாட்டும் போதுமா வாழ்ந்து காட்டனும்ல என்று சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி தூங்கி கொண்டிருக்கும் போது சத்தம் கேட்கிறது. வெளிய வந்து பார்த்தால் கண்ணம்மா மாவு அரைத்து கொண்டிருக்க, பாரதி என்ன செய்கிறாய் என்று கேட்கிறார். பார்த்தால் தெரியவில்லையா என்று கேட்கிறார். வீட்டிற்கு எதற்கு 2 கிரைண்டரில் மாவு அரைக்கிறாய் என்று கேட்க நாங்க விற்க அரைக்கிறேன் என்று சொல்கிறார்.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீர்ரகள் நாடு திரும்பினர் – மத்திய அரசு கௌரவிப்பு!

கீழ் வீட்டில் இருக்கும் அக்கா, நான், துளசி சேர்ந்து மாவு அரைத்து இந்த பகுதியில் உள்ள எல்லா கடைகளிலும் கொடுப்போம் என்று சொல்ல பாரதி வருத்தப்படுகிறார். இப்பவே மணி 1 ஆச்சு எப்போ தூங்குவ என்று கேட்க தினமும் 2 மணி ஆகும் என்று கண்ணம்மா சொல்கிறார். காலையில் எத்தனை மணிக்கு எந்திரிப்ப என்று கேட்க 6, 6.30க்கு எந்திரிப்பேன் என்று சொல்கிறார்.

தினமும் இவ்வளவு லேட்டா தூங்கி எந்திரிச்சா உடம்பு என்ன ஆகும் என பாரதி கேட்கிறார். என்ன செய்ய சார் வாழ்ந்து காட்டனும்ல, சவால் விட்ட மட்டும் போதுமா வாழணும்ல, இது மட்டும் இல்ல சில அரசு அலுவலகங்களில் சமைச்சு கொடுப்பேன், தையல் தைப்பேன், மெழுகு வர்த்தி செய்வேன் சும்மாவே இருக்கமாட்டேன் என்று சொல்கிறார்.

இந்தியாவில் கொரோனா 3ம் அலை தொடங்கி விட்டது – அலர்ட் ரிப்போர்ட்!

நீங்க போய் தூங்குங்க எனக்கு நைட் லேட்டா தூங்கி பழகிருச்சு ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை என்று சொல்கிறார். வெண்பா கண்ணம்மாவின் வீட்டிற்கு வர அங்கே போலீசார் அவரை தடுத்து நிறுத்துகின்றனர். கண்ணம்மாவை நினைத்து பாரதி துக்கம் வராமல் இருக்க, வெகு நேரம் ஆகி கண்ணம்மா தூங்கிவிட்டலா என வெளியே வந்து பார்க்கிறார். கண்ணம்மா வெளியே திண்ணையில் தூங்கி கொண்டிருக்கிறார். பாரதி அதை பார்த்து கவலைப்படுகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post கண்ணம்மா இரவு முழுவதும் வேலை செய்வதை பார்த்து வருத்தப்படும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3xvhc45
via IFTTT
கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture