ஆன்லைன் மூலம் வேலையின்மை சான்றிதழ் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
தமிழகத்தில் வேலையின்மை சான்றிதழ் பெற்றுக் கொள்ளவதற்கு ஆன்லைன் மூலமே தற்பொழுது விண்ணப்பித்துக் கொள்ள முடியும். அதற்காக பயனர்கள் ரூ.60 மட்டுமே கட்டணமாக செலுத்த வேண்டும். இது குறித்த கூடுதல் விளக்கங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பம்
தற்போது அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் ஒருவர் இருக்கும் இடத்தில் இருந்தே பல வகையான சேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அந்த வகையில் ஆதார் விண்ணப்பம், புதுப்பித்தல், வங்கி சேவைகள், பரிமாற்றம், பான் விண்ணப்பம், அரசு சான்றிதழ் உட்பட பல சேவைகளை ஆன்லைன் வழியாகவே செய்து கொள்ள முடியும். அந்த வகையில் வேலையின்மை சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளும் ஆன்லைன் மூலமே மேற்கொள்ளும் வகையில் எளிதாக்கப்பட்டுள்ளது.
இலவச சமையல் எரிவாயு உஜ்வாலா 2.0 திட்டம் – பிரதமர் மோடி இன்று துவக்கி வைப்பு!
இதற்கான முக்கிய ஆவணங்களாக விண்ணப்பதாரரின் புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், தகுதி சான்றிதழ் மற்றும் பரிமாற்ற சான்றிதழ் ஆகியவை தேவைப்படும். இந்த ஆவணங்களை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,
- முதலில், https://www.tnesevai.tn.gov.in/Citizen/ என்ற இணையதளத்தை திறக்கவும்.
- அதில் புதிய பயனர் என்பதை தேர்வு செய்து உள்நுழையவும்.
- இதில் கேட்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் சரியாக நிரப்பவும்.
- பின்னர் அதில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- அதை உள்ளிட்டால் லாகின் ID உருவாகும்.
- புதிய பக்கம் திறந்ததும் Department Wise என்பதில் Revenue Department என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- பிறகு Unemployment Certificate என்பதில் CAN register என கொடுக்கவும்.
- இந்த CAN எண் தெரியாதவர்கள், அதே போர்டலில் பயனர் பெயர் மற்றும் தந்தை பெயரை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம்.
- பின்னர் CAN எண்ணை கொடுத்ததும் உங்கள் விவரங்கள் கிடைக்கும்.
TN Job “FB Group” Join Now
- தொடர்ந்து கொடுக்கப்பட்ட படிவத்தில் உங்களது கல்வி மற்றும் பிற தகவல்களை பதிவு செய்யவும்.
- பிறகு மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோட் செய்யவும்.
- தொடர்ந்து Self Declaration படிவம் கொடுக்கப்படும்.
- இதை பிரிண்ட் செய்து ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
- இதற்காக ரூ.60 மட்டும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
- இந்த விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டவுடன் சான்றிதழ் கிடைத்ததும் மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.
- பின்னர் இந்த இணையதளத்திலேயே லாகின் செய்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post ஆன்லைன் மூலம் வேலையின்மை சான்றிதழ் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3yBIY0k
via IFTTT
No comments:
Post a Comment