5 மாவட்டங்களில் முகாம்கள் ரத்து – கேரளாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு எதிரொலி!
கேரளாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடும் மாநிலத்தில் அதிகரித்துள்ளது.
தடுப்பூசிக்கான தட்டுப்பாடு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா 3ம் அலை தடுப்பு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. நாட்டிலேயே கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் கேரளா தற்போது முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில், அங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுஇடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ,5,000 அபராதம் – சென்னை வாசிகள் கவனத்திற்கு!
தினசரி 20,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 13%க்கு மேல் உள்ளது. இதுவரை 1 கோடியே 56 லட்சத்து 63 ஆயிரத்து 417 பேருக்கு முதல் டோசும், 64 லட்சத்து 24 ஆயிரத்து 876 பேருக்கு 2வது டோசும் செலுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் 60 வயதுக்கு மேலானவர்கள் அனைவருக்கும் வரும் 15ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. கல்வி பணியாளர்கள் அனைவருக்கும் ஆகஸ்ட் 31ம், தேதிக்குள் தடுப்பூசி செலுத்த ஆயத்த பணிகள் நடந்து வந்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்கு திடீரென்று கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிலும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் தடுப்பூசி இருப்பு முற்றிலுமாக காலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த 5 மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு பற்றி கேரளா அரசு சரியான அளவில் கேட்காதது தான் தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு கரணம் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post 5 மாவட்டங்களில் முகாம்கள் ரத்து – கேரளாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு எதிரொலி! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3fTlIn5
via IFTTT
No comments:
Post a Comment