தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Wednesday, November 21, 2018

புயலில் சிக்கிய பள்ளிகள்

*புயலில் சிக்கிய 40 பள்ளிகள் சேதம் இயக்குனருக்கு சி.இ.ஓ., அறிக்கை*

*திண்டுக்கல் மாவட்டத்தில் 'கஜா' புயலில் சிக்கி 40 பள்ளிகள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனருக்கு சி.இ.ஓ., அறிக்கை அளிக்க உள்ளார்*

*'கஜா'வின் கோரத்தாண்டவத்துக்கு பள்ளிக்கூடங்களும் தப்பவில்லை. பல இடங்களில் பள்ளிகள் மீது மரங்கள் விழுந்து கட்டடங்கள் சேதம் அடைந்தன*

*இப்பள்ளிகளின் விவரம், சேத மதிப்புகளை பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் கோரி இருந்தார்.திண்டுக்கல்லை பொறுத்தவரை 40 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளன*

*குறிப்பாக, அய்யலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நின்ற 45 மரங்கள் 'கஜா'வின் ஆட்டத்தால் சாய்ந்தன*

*செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம் மீது 4 மரங்கள் சாய்ந்து விழுந்தன. செட்டியப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் 120 மீட்டர் நீளத்துக்கு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது*

*கொடைக்கானலில் 10க்கும் அதிகமான பள்ளிகள் மரம் விழுந்து சேதம் அடைந்தன*

*சேத விவரங்களை சி.இ.ஓ., சாந்தகுமாருக்குதலைமை ஆசிரியர்கள் அனுப்பினர்.அவர் கூறும்போது, 'திண்டுக்கல் மாவட்டத்தில் 40 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளன*

*குறிப்பாக கொடைக்கானலில் மரம் விழுந்ததில் 6 பள்ளி கட்டடங்களில் விரிசல் விழுந்து மழை நீர் ஒழுகுகிறது*

*இது குறித்து கலெக்டர், பள்ளி கல்வி இயக்குனருக்கு அறிக்கை அளித்துள்ளோம். விரைவில் அரசின் உதவியோடு சீரமைப்பு பணி துவங்கும்' என்றார்*

*SOURCE DINAMALAR WEBSITE*

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture