தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Wednesday, November 21, 2018

இப்போது தெரியாது பிறகு தெரியும்

*கஜா புயலால நமக்கு ஒன்னும் பிரச்சனை இல்லனு நினைக்கிறீங்களா? *

இதப் படிங்க அப்புறம் புரியும்

சென்னையில வெள்ளம் வந்தபோதும், தானே புயல் அடிச்சு நொறுக்கிய போதும் #SaveChennai-னு டாக் போட்டுட்டு ஓடி ஓடி உதவி பன்னுனவனுல பாதி பேரோட ஊரு தான் இண்னைக்கு கஜா புயலால சுருட்டி அடிச்சு தனித் தீவு போல கிடக்கு.

தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், திருச்சி மாவட்டத்துல இருந்து கையில கிடச்சதலாம் எடுத்துகிட்டு வண்டி வண்டியா கொண்டு வந்து கொடுத்து சென்னைவாசிகளோட பசிய போக்குன அந்த விவசாயியோட குடும்பமெல்லாம் இன்னைக்கு குடிக்க தண்ணி கூட கிடைக்காம தடுமாறிகிட்டு இருக்கு.

ஆனா, சென்னை மட்டும் தான் தமிழ்நாடுனு நினைச்சிக்கிட்டு இருக்குற மக்களுக்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களும் தமிழ்நாட்டுல தான் இருக்குனு நெனச்சு பாக்க கூட நேரமில்ல.

ஹாயா டிவிய பாத்துகிட்டு வாரவிடுமுறைய கொண்டாட தொடங்கிட்டாங்க.

தன் சொந்த ஊருல என்ன ஆச்சோ ஏதாச்சோனு அவங்கள தொடர்புகொள்ள முடியாம அலுவலகத்துல வேலை பாத்துகிட்டு இருக்குற எத்தனை பேருக்கு கூட இருக்கிறவன் ஆறுதல் சொல்லியிருப்பா?

"நாங்க பாக்காத புயலா.. நாங்களும் வர்தா புயல பாத்தவங்க தான்னு" பல பேர் இங்க மெத்தனமா சொல்லிட்டு இருக்காங்க.

சரிதான் வர்தா, கஜா ரெண்டுமே புயல் தான்.
ஆனா ரெண்டு புயலாலும் ஏற்பட்ட அழிவுகள் வித்தியாசமானவை. காரணம் "வர்தா - அலங்காரத்தை மட்டும் அழித்தது;✅

கஜா - வாழ்வாதாரத்தையே அழித்துவிட்டது".🎯

இதில் உங்களுக்கு என்ன பாதிப்பு என்று தானே யோசிக்கிறிங்க!

உங்களுக்கும் நிச்சயம் பாதிப்பு இருக்கு.

அது இன்னைக்கு தெரியாது. இன்னும் ஒரு மாசத்துக்கு அப்புறம் கடையில தேங்காய், வாழைப்பழம் வாங்க போகும்போதும், 4 மாசத்துல மாங்காயின் விலை கேட்கும் போதும், 6 மாசத்துல முந்திரி சாப்பிட நினைக்கும் போதும் கஜா புயலின் தாக்கம் உங்களுக்கு தெரிய வரும்.

இதற்கெல்லாம் காரணம், தமிழகத்தில் தேங்காய்க்கு ஆதாரமாக விளங்கிய வேதாரண்யம், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மன்னார்குடி, பேராவூரணி, திருவாரூர் பகுதி தென்னந்தோப்பு முழுவதும் தரைமட்டமாய் கிடப்பது தான்.

மேலும் முக்கனிகளான

மா, பலா, வாழைக்கு பெயர்போன புதுக்கோட்டை மாவட்டத்தின் வடகாடு, மாங்காடு, ஆலங்குடி, கறம்பக்குடி பகுதிகளில் இன்று எந்த மரங்களும் இல்லை.
இந்த மரங்களை எல்லாம் இனி நட்டு வளர்த்து கனிகளைப் பெற இன்னும் குறைந்தது 5 வருடங்கள் ஆகும்.

இந்த 5 வருடங்களிலும் விளைச்சல் இன்றி இந்த காய்களுக்கு பற்றாக்குறை உண்டாகி விலைவாசி ஏறும்போது கஜாவின் ஞாபகம் நிச்சயம் உங்களுக்கு வரும்.

விவசாயிகள் இன்று சிந்தும் கண்ணீர் நாளை உங்களுக்கு புரியும். ...😭😭😭

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture