தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Wednesday, November 21, 2018

ப்ளீஸ் ஷேர் பண்ணுங்கள்

தயவுசெய்து முழுசா படிங்க.... *நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கஜா புயலின் தாக்கத்தால்   எங்கள் பகுதி முழுவதுமே சேதம் அடைந்து தமிழ்நாட்டுக்கே சோறு போட்ட நாங்கள் குடியிருந்த வீட்டையும் இழந்து ஒரு வேலை சோத்துக்கு முகாம்களில் கையேந்தி நிற்கிறோம். வேதாரண்யம் பகுதியில் 36 ஊராட்சியிலும் இது தான் நிலைமை ஆனால் இதை எந்த ஒரு ஊடகமும் காட்டுகிறதா..?? என எங்களுக்கு தெரியவில்லை,கிராம பகுதிகளுக்கு ஊடகங்கள் வருவதில்லை (தெரியப்படுத்தி இருந்தால் எங்களுக்கு அடிப்படை வசதி வந்திருக்குமே)   எங்கள் பகுதி* *மக்களின் வாழ்வாதாரம் இன்னும் சுமார் 40 வருடங்களுக்கு பாதிக்கப்பட்டு விட்டது நாங்கள் ஆசையாய் பார்த்து பார்த்து வளர்த்த எங்கள் தென்னை மரங்கள், மா மரங்கள், முந்திரி, புளி, பூச்செடிகள், போன்ற எங்களின் வருமான வழிகள் அனைத்தும் கஜா புயலால் பாதித்து விட்டது. இன்னும் சில மாதங்களில் எங்களை காப்பாத்தும் என நம்பிய சவுக்கு மரங்களும் வேரோடு சாய்ந்து எங்களையும் சாய்த்து விட்டது.சவுக்க தோப்பால் பல குடும்பங்கள் வாழ்ந்தது, இங்கு அடித்த புயலின் அளவு சுமார் 180 km மேல்தான் ஆனால் இதனை மாநில அரசாங்கம் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி மத்திய அரசின் உதவி கிடைக்காமல்  எங்களை அடியோடு அழிக்க நினைக்கிறதா...‌?என தெரியவில்லை இந்த அரசியல் விளையாட்டில் உடனே மத்திய அரசு தலையிட்டு எங்களுக்கு நியாயம் வழங்கி உடனே ஓரு குழுவை அமைத்து உண்மை நிலையை அறிய மத்திய அரசை தாழ்மையுடன் வேண்டுகிறோம். இதுவரை 36 ஊராட்சிகளில் பல ஊராட்சிகளில் சாலைகளில் உள்ள மரங்களே இன்னும் அகற்றப்படாமல் உள்ளது மிகவேதனையை தருகிறது. சில இடங்களில் மட்டும் மத்திய அரசின் பேரிடர் மீட்பு குழுவினர் மட்டும் தான் பணி செய்கிறார்கள் மாநில அரசின் பணி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை இதுவே அந்த அம்மையார் இருந்திருந்தால் இந்நேரம் அமைச்சர் பட்டாளமே வந்து எங்களுக்கு உதவி இருக்கும் இப்போது உள்ள* *நிலைமையில் உதவ யாருமே இன்றி அனாதையாய் நிற்கும் எங்கள் பகுதியின் நிலைமையை அனைத்து ஊடக வாயிலாக மத்திய/ மாநில அரசின் செவிகளுக்கு கொண்டு செல்ல உதவுங்கள் Fb, வாட்ஸ் அப் குழு நண்பர்களே ....!! இந்த பதிவு போடும் வரை  எங்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து  எதற்கும் பணிகள் தொடரவில்லை என்பது உண்மை நல்ல மனம் படைத்த உங்களிடம் பணம், பொருள்கள் நாங்கள் கேட்க வில்லை ஷேர் செய்து மத்திய/ மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் போதும் இந்த செய்தியை அனுப்ப நான் சுமார் 30 km வந்து (ஊரில் நெட் வசதி மின்சாரம் இல்லை) தெரியப்படுத்துகிறேன் நீங்களும் வந்து இந்த உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்.......* 15.11.2018 ல் நடந்தது இன்று 20.11.2018 செவ்வாய்😭😭😭 plz Share......வேதாரண்யம் மக்களுக்காக....share plz...

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture