WhatsApp மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் – புதிய வசதி அறிமுகம்!
கொரோனா நோய்த்தொற்றினை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. மேலும் அதற்கான சான்றிதழை தற்போது WhatsApp மூலம் பெற்றுக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளது.
தடுப்பூசி சான்றிதழ்:
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான சான்றிதழை பெறுவது முக்கியமான ஒன்று. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளுக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் மிகவும் அவசியமாகும். தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை WhatsApp மூலம் பெறும் வசதியை சுகாதாரத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன் தடுப்பூசி செலுத்தியவர்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் லிங்க் மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டு வந்தது.
ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
டிஜி லாக்கர், கோவின் தளத்தில் சென்று செல்போன் எண்ணை பதிவு செய்வது மூலமாகவும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பெறும் வசதி இருந்தது. தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக மக்கள் அதிகமாக WhatsApp பயன்படுத்தி வரும் நிலையில் அதன் மூலமே சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருந்தது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேருக்கு கொரோனா – 447 பேர் உயிரிழப்பு!
அதில், ‘சாமானிய மக்கள் வாழ்க்கையில் அதிகமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழையும், எளிதான வழிகள் மூலம் மைகவ் கொரோனா ஹெல்ப் டெஸ்க் மூலம் பெறலாம். +91 9013151515 என்ற செல்போன் எண்ணை சேமித்துக் கொண்டு, WhatsApp இல் இந்த எண்ணுக்கு கோவிட் சர்டிபிகேட் என்று டைப் செய்து அனுப்ப வேண்டும். உடனடியாக சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்’ என கூறப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post WhatsApp மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் – புதிய வசதி அறிமுகம்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/2X4eS7D
via IFTTT
No comments:
Post a Comment