தமிழகத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் – TRB மூலம் நியமனம்!
தமிழகத்தில் காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களில் 50 சதவிகித பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவும், மீதமுள்ளவர்கள் நேரடி நியமனம் மூலமாக நியமனம் செய்யலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை வெளியீடு:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலமாக நிரப்பப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் முதல் தேதியன்று வட்டாரக் கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கு 50 விழுக்காடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவும், நேரடி நியமனம் மூலம் நிரப்பலாம் என அரசாணையில் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், திணைக்களத் தலைவர் நியமன அதிகாரியாக இருக்கும் நேரடி ஆட்சேர்ப்பு முறையால் நிரப்பப்பட வேண்டிய பதவியைப் பொறுத்தவரை, நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைகள் மற்றும் ஊழியர்களின் ஒப்புதல் பெறாமல் காலியிடங்களின் மதிப்பீடு அவரால் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு அரசு ஆலோசனை – தீவிரமாகும் போர்!
பணி நியமன முறையின் மூலம் நிரப்பப்பட வேண்டிய பணியிடத்தைப் பொறுத்தவரை, துறைத் தலைவரின் கீழ் உள்ளவர்கள் நியமிக்கும் அதிகாரியாக, காலியிடங்களின் மதிப்பீடு சம்பந்தப்பட்ட நியமன அதிகாரிகளால், ஒப்புதல் பெறப்படாமல் நிர்ணயிக்கப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் போன்ற ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டிய பணியிடத்தைப் பொறுத்தவரை, அந்தந்த நியமன அதிகாரிகளால் காலியிடங்களின் மதிப்பீடு நிர்ணயிக்கப்படும்.
TN Job “FB
Group” Join Now
மேற்கண்ட அரசாணைகளின் படி 2019-2020 மற்றும் 2020-2021ஆம் கல்வி ஆண்டில் நேரடி நியமன பணியிடங்கள் ஒதுக்கீடு செய்ய வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களில் வயது முதிர்வு ஒய்வு / தன்விருப்ப ஓய்வு | கட்டாய ஒய்வு / இயலாமை ஒய்வு / இறப்பு / உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு போன்றவற்றால் காலி எற்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தின் விவரங்களை இணைப்பில் குறிப்பிட்டுள்ள படிவம் 1 & 2 இல் பூர்த்தி செய்து , கையொப்பமிட்டு ஒரு வார காலத்திற்குள் deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்புமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post தமிழகத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் – TRB மூலம் நியமனம்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3xFoAtP
via IFTTT
No comments:
Post a Comment