ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு அரசு ஆலோசனை – தீவிரமாகும் போர்!
தலிபான்களது தாக்குதலால் நிலை குலைந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் வசிக்கும் இந்திய மக்களின் பாதுகாப்பை கருதி அரசு சில ஆலோசனைகளை வெளியிட்டு, அதனை கண்டிப்பாக கடைபிடிப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அரசு ஆலோசனை
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலிபான்களின் தாக்குதல் மீண்டுமாக உருவெடுத்து வருகிறது. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தவிர அந்நாட்டில் உள்ள ஏராளமான பகுதிகளை கைப்பற்றியுள்ள தலிபான்கள் காபூல் நகருக்கு அருகில் முன்னேறி வருவதாக செய்திகள் பெறப்பட்ட நிலையில், அப்பகுதியில் வசிக்கும் இந்திய நாட்டு குடிமக்களை பாதுகாக்கும் விதத்தில் அரசு சில ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
தமிழக தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை – பள்ளிக்கல்வி ஆணையர்!
இது தொடர்பாக ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம், ‘இந்திய நாட்டு மக்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளில், சில முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசின் வழிகாட்டுதல்களின் கீழ் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது. இது தவிர ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்திய ஊடகங்களை சேர்ந்த உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் தங்குவதற்கும், பயணம் செய்வதற்கும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு பகுதியில் பணிபுரிந்து வந்த மூன்று இந்தியப் பொறியாளர்கள் சமீபத்தில் மீட்கப்பட்டனர். அதனால் இந்திய தூதரகத்தின் ஆலோசனைகளை இந்திய நாட்டு பிரஜைகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என மீண்டுமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 10 ஆம் அன்று வெளியிடப்பட்ட கடைசி ஆலோசனையில், ஆப்கானிஸ்தானில் வன்முறைகள் பெருமளவில் அதிகரித்துள்ளதால் அங்கு வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் வணிக மற்றும் விமான சேவைகள் நிறுத்தப்படுவதற்கு முன்பு உடனடியாக நாடு திரும்புவதற்கான பயண ஏற்பாடுகளை செய்யுமாறு தூதரகம் தீவிரப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான கந்தஹாரை இன்று (ஆகஸ்ட் 13) கைப்பற்றியதாக தலிபான்கள் குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு அரசு ஆலோசனை – தீவிரமாகும் போர்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/2Xos7QV
via IFTTT
No comments:
Post a Comment