தமிழகத்தின் சிறந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது அறிவிப்பு!
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியர்களாக நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் முதலமைச்சர் விருதுகளை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருது:
தமிழகத்தில் சிறந்த மாவட்டம் மற்றும் ஊராட்சி பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்குவது வழக்கம். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய, மாவட்ட கலெக்டர், மருத்துவர், வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனம், அரசு சாரா தொண்டு நிறுவனம், சேவை புரிந்த சமூகப் பணியாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோருக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்படும்.
தமிழகத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் – TRB மூலம் நியமனம்!
நடப்பு ஆண்டுக்கான விருதுகள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் தகுதியான நபரை தேர்வு செய்ய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் ஜூலை 8ம் தேதி நடைபெற்றது. இதில் தகுதியான நபர்களாக மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பங்காற்றிய நீலகிரி மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் சிவகங்கை மாவட்ட கலெக்டர் பி.மதுசூதன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனம் – திருச்சி ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி; சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர் – நாகர்கோவில் மரிய அலாசியஸ் நவமணி, சேவை புரிந்த சிறந்த மருத்துவர் – பூ.பத்மபிரியா ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. அதே போல் மிக அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் – வி ஆர் யுவர் வாய்ஸ், சென்னை, சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியர்களாக நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தலா 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் தவிர மற்றவர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியர்களுக்கான விருது மாவட்ட கலெக்டர் மாநாட்டின் போது வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post தமிழகத்தின் சிறந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது அறிவிப்பு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3g0tStR
via IFTTT
No comments:
Post a Comment