SBI வங்கியில் வீட்டுக் கடனுக்கான அதிரடி சலுகை – ஆகஸ்ட் 15 முதல் அமல்!
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி SBI வங்கி, வாடிக்கையாளர்களின் வீட்டுக் கடன் சேவையில் சில சலுகையை அளிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப விவரங்கள் குறித்த தகவல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
வீட்டு கடன்
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது SBI வாடிக்கையாளர்கள் வீடுகளுக்காக செலுத்தும் வாடகையிலிருந்து சுதந்திரம் பெற உதவும் வகையில், வீட்டுக் கடன்களுக்கான பூஜ்ஜிய செயலாக்கக் கட்டணத்தை வழங்குகிறது. இது தொடர்பான தகவலை ட்வீட் மூலம் வெளியிட்டுள்ள SBI வங்கி நிர்வாகம், ‘இந்த சுதந்திர தினம், SBI வாடிக்கையாளர்களின் கனவு இல்லத்தை நனவாக்கும் நாளாக மாற்றுகிறது.
தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு பணி நியமனம் – முதல்வர் முக ஸ்டாலின் வழங்கல்!
இப்போது SBI வீட்டுக் கடன்களில் ஜீரோ செயலாக்கக் கட்டணத்துடன் சலுகையை பெற்றுக்கொள்ள முடியும்’ என குறிப்பிட்டுள்ளது. இது தவிர, SBI வங்கியில் வீட்டுக் கடன்களுக்கான மிகவும் கவர்ச்சிகரமான தள்ளுபடி வசதியின் நன்மைகள் பெண்களுக்காக வழங்கப்படுகின்றன. அதாவது வீட்டுக் கடன் வசதியின் கீழ், பெண்களுக்கு 5% BPS வட்டி சலுகை வழங்கப்படுகிறது. இதனுடன் SBI யோனோ சேவையின் கீழ் வீட்டுக் கடன் பெற விரும்பினால், கூடுதலாக 5% BPS வட்டி சலுகையின் கீழ் பலனைப் பெறலாம்.
தமிழக அரசு வழங்கும் ரூ.3,500 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தவிர SBI வீட்டுக் கடன்களுக்கு ஒருவர் 6.70% வட்டி செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்ப முறைகளை பொருத்தளவு, வாடிக்கையாளர்கள் ஆசாடி கா அமிர்த மஹோத்ஸவ் சேவையின் ஒரு பகுதியாக, SBI வங்கியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் வீட்டுக் கடன் வசதியைப் பெறலாம். மேலும் SBI யின் டிஜிட்டல் சேவையான யோனோ SBI மூலம் தனிநபர் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இதுதவிர, SBI வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள 7208933140 என்ற இலவச இணைப்பை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post SBI வங்கியில் வீட்டுக் கடனுக்கான அதிரடி சலுகை – ஆகஸ்ட் 15 முதல் அமல்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3AIGkq4
via IFTTT
No comments:
Post a Comment