தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Saturday, August 14, 2021

தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு பணி நியமனம் – முதல்வர் முக ஸ்டாலின் வழங்கல்!

தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு பணி நியமனம் – முதல்வர் முக ஸ்டாலின் வழங்கல்!

தமிழகத்தில் இந்து அறநிலைத்துறை கீழ் உள்ள கோவில்களில் அணைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேலும் 58 பேருக்கு பணிநியமனம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அறநிலைத்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் இந்து அறநிலைத்துறை கீழ் பல்வேறு கோவில்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் ஆகலாம் என்ற திட்டத்தினை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் அர்ச்சகருக்கான பயிற்சியை பெற்ற பிற சமூகத்தினருக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அர்ச்சகர், ஓதுபவர்களுக்கான பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் வழங்கியுள்ள நிலையில், திருக்கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் இதன் மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக அரசு வழங்கும் ரூ.3,500 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த திட்டம் கடந்த 2006ஆம் ஆண்டு மறைந்து முதல்வர் கருணாநிதி அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை பேசி தொடங்கி வைத்தார். தற்போது தான் அவரது ஆசை நிறைவேறி உள்ளது. இதனை தமிழக முதல் ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றினார். இந்த திட்டம் இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு பொறுப்பேற்ற போது இன்னும் 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகாலம் என்ற திட்டம் முதலில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

தமிழக அரசு வழங்கும் ரூ.7000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அவரின் அறிவிப்பு படி இந்த திட்டம் தொடங்கப்பட்டு பணி நியமனமும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பள்ளியில் படித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 பேர்களுக்கு இந்த பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்கள் வெவ்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக பணிபுரிய உள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் அரசு தரப்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என் நேரு, மா. சுப்பிரமணியன், சேகர் பாபு உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு பணி நியமனம் – முதல்வர் முக ஸ்டாலின் வழங்கல்! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/37DWHbb
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture