தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Thursday, August 19, 2021

பாஸ்கர் பற்றி சரவணனிடம் சொல்லும் பார்வதி, கல்யாணத்திற்கு சம்மதிக்கும் சிவகாமி – இன்றைய எபிசோட்!

பாஸ்கர் பற்றி சரவணனிடம் சொல்லும் பார்வதி, கல்யாணத்திற்கு சம்மதிக்கும் சிவகாமி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், பாஸ்கர் குறித்த முழு உண்மையை பார்வதி சரவணனிடம் சொல்கிறார். பின்னர் சரவணன் எடுத்து சொன்னதும் சிவகாமி கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் கடையில் இருக்க சந்தியா பேசியதை நினைத்து பார்க்கிறார். அப்போது அங்கே பார்வதி வருகிறார். அவர் சரவணனிடம் எதோ பேச முயற்சி செய்ய,சரவணனன் தனியாக கூட்டிக் கொண்டு செல்கிறார். பார்வதி பாஸ்கர் அர்ச்சனா தங்கையை தான் பொண்ணு பார்க்க வந்தார். ஆனால் அன்று நான் வந்த காரணத்தால் என்னை பார்த்துவிட்டு பிடித்துவிட்டது என்று சொல்லிவிட்டார். நானும் அவரை பல தடவை நிராகரித்தும் அவர் என் பின்னாடியே வருவார் என்று சொல்கிறார்.

கோபியை மிரட்டும் ராஜேஷ், போலீசிடம் பொய்யான புகார் அளிக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விக்கி போல ஒருவனை பார்த்த பின்னர் தான் தெரிந்தது பாஸ்கர் எவ்வளவு நல்லவன் என்று எனக்கும் அவரை பிடித்துவிட்டது என்று சொல்கிறார். உடனே சரவணன் சரி அம்மாவிடம் பேசுகிறேன் உன் சந்தோசம் தான் முக்கியம் என்று சொல்கிறார். அர்ச்சனா தனது தங்கச்சி பற்றி பேச பாஸ்கர் வீட்டிற்கு செல்கிறார். அங்கே பாஸ்கர் அப்பா அம்மா இருக்க நீங்க பொண்ணு பார்க்க வந்தது என் தங்கச்சியை என்று சொல்ல எங்களுக்கு பார்வதியை தான் பிடித்துள்ளது என்று சொல்கிறார். உடனே பார்வதியின் அண்ணன் ஆமாம் அதான் விசாரிக்க வந்தோம் என சமாளித்து அங்கிருந்து அர்ச்சனாவை கூட்டி செல்கிறார்.

பின்னர் அனைவரும் அமர்ந்து சாப்பிட பார்வதி வருகிறார். பின்னாடி சரவணன் ஒரு வேலையாக வெளியே போனேன் என்று சொல்லி சமாளிக்கிறார். சிவகாமியிடம் கல்யாணம் பற்றி எவ்வளவோ பேச அவர் பார்வதி வர சொல்லி தான் அவர்கள் வந்திருக்காங்க என்று சொல்கிறார். கூட இருப்பவர்கள் சந்தோசம் தான் முக்கியம் என சரவணன் சொல்லி சந்தியாவை நினைத்து பார்க்கிறார்.

லட்சுமி கண்ணம்மாவை நினைத்து வருத்தப்படும் குடும்பத்தினர், அஞ்சலியை நினைத்து சந்தோசப்படும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

பார்வதியிடம் உனக்கு மாப்பிளையை பிடித்துள்ளதா என கேட்க பிடித்துள்ளது. அப்பா அம்மா என்ன முடிவு செய்கிறாரோ அதன் என் முடிவும் என்று சொல்கிறார். அதன் பின்னர் சிவகாமி மாப்பிள்ளை வீட்டில் பேச வர சொல்லு என்று சொல்கிறார். சரவணன் மாப்பிள்ளை அப்பாவிடம் போன் செய்து நாளைக்கு நல்ல நாளாக இருக்கு நிச்சயம் பண்ணிக்கலாம் என்று சொல்கிறார். நிலைமை கை மீறி சென்றுவிட்டது எதாவது செய்ய வேண்டும் என அர்ச்சனா நினைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post பாஸ்கர் பற்றி சரவணனிடம் சொல்லும் பார்வதி, கல்யாணத்திற்கு சம்மதிக்கும் சிவகாமி – இன்றைய எபிசோட்! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3ghQg23
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture