சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மாநகராட்சி எச்சரிக்கை!
தமிழகத்தில் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வந்துகொண்டிருக்கும் சூழலில் சென்னை மாநகரில் புதிய பாதிப்புகள் லேசாக உயர்வதை கண்டு மீண்டும் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை பரவலானது தற்போது வெகுவாக குறைந்துள்ளது. அதாவது மே மாதத்தில் தினசரி புதிய பாதிப்புகள் 30 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், ஜூன் மாதத்தில் இந்த நோய் தொற்று பாதிப்பானது சற்றே குறைய துவங்கியது. அந்த வகையில் தற்பொழுது தினசரி பாதிப்புகள் 2 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ரூ.78,000/- சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க
எனினும் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதனிடையே 2 ஆம் அலை பாதிப்புகள் சில மாவட்டங்களில் மட்டும் ஏற்றம் கண்டுள்ளதால் அப்பகுதிகளில் உரிய கட்டுப்பாடுகளை விதிக்கும் படி அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நீலகிரி போன்ற மாவட்டங்களில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.
செப்.1ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கொரோனா புதிய பாதிப்புகள் சற்றே அதிகரித்துள்ளது. அதன் காரணமாக சென்னை மாநகராட்சி முழுவதும் மீண்டுமாக முழு ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை விதிக்க நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருது 2021 அறிவிப்பு – தமிழகத்தில் 2 ஆசிரியர்கள் தேர்வு!
அந்த வகையில் பொது மக்கள் வெளி இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இப்படி இல்லாத பட்சத்தில் சென்னையில் மீண்டுமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மாநகராட்சி எச்சரிக்கை! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/2W8Fl3H
via IFTTT
No comments:
Post a Comment