செப்.1ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு உத்திரபிரதேச மாநில அரசு வரும் செப்டம்பர் 1ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க திட்டமிட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா 2வது அலை பரவல் தற்போது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. தினசரி 4 லட்சம் வரை பதிவாகி வந்த தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை தற்போது 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் மாநில வாரியாக அமலில் உள்ள ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. தமிழகத்திலும் செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் முதல் பட்டதாரி சான்றிதழ் – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை!
தற்போது உத்திரபிரதேச மாநில அரசு கொரோனா வைரஸ் பரவல் நிலைமைகளை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆகஸ்ட் 23 முதல் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்படும். அம்மாநிலத்தில் ஏற்கனவே ஆகஸ்ட் 16ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.
TNTEU PG Degree அட்மிஷன் அறிவிப்பு 2021 – முழு விவரங்கள் உள்ளே!!!
இருப்பினும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் 50 சதவீத மாணவர்களுக்கு இரண்டு ஷிப்டுகளில் நடத்தப்படுகின்றன. சமூக இடைவெளி, சானிடைசர்கள் பயன்படுத்துதல், முகக்கவசம் அணிதல் போன்ற அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதை உறுதி செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் உத்திரபிரதேச மாநிலத்தில் பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post செப்.1ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3iZng0Y
via IFTTT
No comments:
Post a Comment