இந்தியாவின் மருந்து ஒழுங்குபடுத்தும் நிபுணர் குழுவினர் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளின் கலந்து பயன்படுத்தும் முறையினை குறித்து ஆய்வு நடத்த கடந்த மாதம் பரிந்துரைத்திருந்தது.
கொரோனா தடுப்பூசிகள்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிர நிலையில் உள்ளது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. இருப்பினும், நோய் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி ஒன்று தான் சிறந்த வழியாக உள்ளது. முதலில் மக்களிடம் தடுப்பூசி தொடர்பான அச்சம் காரணமாக அதிக அளவில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் கொள்கைகளின் மூலம் தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர்ந்து கொண்டனர்.
தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி விவரங்கள் சேகரிப்பு – விரைவில் அறிவிப்பு!
இந்நிலையில், கடந்த மாதம் இந்தியாவின் மருந்து ஒழுங்குபடுத்தும் நிபுணர் குழுவான டிசிஜிஐ கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தும் முறையினை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள பரிந்துரைத்தது. வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இந்த ஆய்வு குறித்து அனுமதி கூறியிருந்த காரணத்தால் இந்த ஆய்வு மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது. இதன் அடிப்படியில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில், அடினோவைரஸ் வெக்டர் பிளாட்ஃபார்ம் அடிப்படையிலான தடுப்பூசியை, செயலிழந்த முழு வைரஸ் தடுப்பூசியையும் சேர்த்து தடுப்பூசி போடுவது பாதுகாப்பானதாகவும், மேலும், சிறந்த நோயெதிர்ப்பு சக்தியையும் வழங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசி மருந்துகளை வழங்குவது குறித்த வாய்ப்பினை குறித்து மதிப்பீடு செய்வது மட்டுமே இந்த ஆய்வின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதவாது, கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு கோவிட் தடுப்பூசிகளையும் கலந்து செலுத்துவது சிறந்த பலனை அளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 300 ஆரோக்கியமான தன்னார்வலர்களின் மூலம் 4 கட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post கோவாக்ஸின் & கோவிஷீல்ட் கலந்து செலுத்தும் தடுப்பூசி பலன் அளிக்குமா? ஆய்வு முடிவுகள் வெளியீடு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/2VrGnYF
via IFTTT

No comments:
Post a Comment