தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Sunday, November 11, 2018

சீருடையில் ஆசிரியர்கள்

ஊட்டி தலையாட்டுமந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியைகள் அரசு உத்தரவுபடி சீருடையில் பள்ளிக்கு வந்தனர்.'அரசு பள்ளிகளில் மாணவர்களை போல, பள்ளி ஆசிரியர்களும், சீருடை அணிந்து வர வேண்டும்,' என, பள்ளிக்கல்வி துறை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியது. மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் அவர்களாகவே சீருடை வண்ணங்களை தேர்வு செய்து பள்ளிக்கு வரலாம்.அதன்படி, ஊட்டி தலையாட்டு மந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியைகள் சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். மாவட்டத்தில் மேலும் சில அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture