தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Monday, August 09, 2021

TNDTE தட்டச்சு தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி சேர்க்கை அறிவிப்பு 2021 

TNDTE தட்டச்சு தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி சேர்க்கை அறிவிப்பு 2021 

2021-ம்‌ ஆண்டிற்கான தட்டச்சுப்‌ பாடங்களில்‌ தொழில்நுட்ப ஆசிரியர்‌ சான்றிதழ்‌ பயிற்சி சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31.08.2021, மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNDTE TTC தகுதிகள்‌:
வயது:

01.06.2021 அன்று 25 ஆண்டுகள்‌ பூர்த்தி செய்திருக்க வேண்டும்‌.

பொது கல்வித்‌ தகுதி:

எஸ்‌.எஸ்‌.எல்‌.சி, அல்லது மெட்ரிகுலேஷன்‌, அல்லது அதற்கு இணையான படிப்பில்‌ தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.

தொழில்நுட்பக்‌ கல்வித்‌ தகுதி:
  • தட்டச்சு ஆங்கிலம்‌ அல்லது தமிழ்‌ மேல்நிலையில்‌ தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி.
  • மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதிகள்‌ மற்றும்‌ வயது வரம்பு 01.06.2021 அன்று உள்ளபடி கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்படும்‌.
  • ஏற்கனவே இப்பயிற்சியில்‌ பங்கேற்று ஏதாவதொரு தேர்வில்‌ தோல்வியுற்றிருந்தாலும்‌, அவர்கள்‌ மீண்டும்‌ முழு கால அளவும்‌ பயிற்சியில்‌ சேர்ந்து பயில வேண்டும்‌.
  • இப்பயிற்சிக்கு தட்டச்சுப்‌ பயிலக உரிமையாளர்கள்‌ மற்றும்‌ அவற்றில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌.
  • தட்டச்சுப்‌ பயிலக உரிமையாளர்கள்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட பயிலகத்தில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்கள்‌ தேர்வு செய்யப்பட்டபின்‌ காலியிடம்‌ இருப்பின்‌, அவ்விடங்களுக்கு பொது விண்ணப்பதாரர்கள்‌ அவர்களின்‌ தகுதி அடிப்படையில்‌ தேர்வு செய்யப்படுவார்கள்‌.
  • சம்பந்தப்பட்ட தட்டச்சுப்‌ பாடத்தில்‌ தேர்ச்சி பெற்ற ஆண்டின்‌ அடிப்படையில்‌ தகுதிப்‌ பட்டியல்‌ தயாரிக்கப்பட்டு அதன்‌ அடிப்படையில்‌ பயிற்சி பெறுவோர்‌ தேர்வு செய்யப்படுவார்கள்‌.
  • ஒரு விண்ணப்பதாரர்‌ ஒரு மையத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப்‌ படிவத்தினை https://ift.tt/2rG2kSr என்ற இணையதளங்களில்‌ இருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும்‌. அதற்கான தொகை ரூ.30/-னை ““The Additional Director of Technical Education (Exam), Chennai – 25” என்ற பெயரில்‌ எடுக்கப்பட்ட [சென்னையில்‌ மாற்றத்தக்க(Payable at Chennai)] வங்கி வரை வோலையினை விண்ணப்பம்‌ பூர்த்தி செய்து அனுப்பப்படும்‌ போது அத்துடன்‌ இணைத்தனுப்பப்பட வேண்டும்‌.

விண்ணப்பிக் கட்டணம்:

இப்பயிற்சி ஆறு வார காலம்‌ நடத்தப்படும்‌. இப்பயிற்சிக்கான (Admission & Tuition Fees) கட்டணத்‌ தொகை ரூ.750/-, மற்றும்‌ (Examination Fees) தேர்வு கட்டணம்‌ ரூ.125/- (ரூ.750-ரூ.129 மொத்தம்‌ – ரூ.875/- மேற்சொன்ன அலுவலர்‌ பெயரில்‌ கேட்பு வரைவோலைப்‌ பெற்று பயிற்சியில்‌ சேரும்‌ நாளில்‌ செலுத்த வேண்டும்‌. இப்பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணாக்கர்களுக்கு மட்டும்‌ பயிற்சி தொடங்கும்‌ நாள்‌ இவ்வலுவலகக்‌ கடிதத்தின்‌ மூலம்‌ தகவல்‌ தெரிவிக்கப்படும்‌. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும்‌ மாணாக்கர்களின்‌ எண்ணிக்கையைக்‌ கணக்கிட்டு, நிர்வாக ரீதியாக சாத்தியக்‌ கூறுகளின்‌ அடிப்படையில்‌ பயிற்சி மையங்கள்‌ தீர்மானிக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட மாணாக்கர்களுக்கு அறிவிக்கப்படும்‌.

பயிற்சி மையங்கள்‌:

இப்பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும்‌ மாணாக்கர்‌ அளிக்கும்‌ விருப்பத்தின்‌ அடிப்படையில்‌ முடிவு செய்யப்படும்‌. உத்தேசமாக கீழ்காணும்‌ இடங்களில்‌ பயிற்சி மையங்கள்‌ ஏற்படுத்தப்படும்‌.

  1. சென்னை
  2. திருச்சி
  3. மதுரை
  4. கோயம்புத்தூர்‌
  5. நாகர்கோவில்‌
  6. சேலம்‌
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி :

The Additional Director (Exams),
Directorate of Technical Education,
Guindy, Chennai – 600 025
(TTC)

Download TNDTE TTC Course Notification Pdf

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post TNDTE தட்டச்சு தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி சேர்க்கை அறிவிப்பு 2021  appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3ApVnVK
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture