தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Monday, August 23, 2021

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் – இன்று முதல் தொடக்கம்!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் – இன்று முதல் தொடக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்படுத்தும் வகையில் இன்று முதல் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் முதற்கட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் பல மாதங்களாக வாட்ஸ்ஆப் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்படுத்தும் வகையில் அரசு சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் திறப்பது குறித்து செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பின்னர் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு – வெளியாக உள்ள படங்களின் விவரம்!!

அதனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திறன்களை மேம்படுத்தும் வகையில் இன்று முதல் கணினி மற்றும் மொபைல் போன்களை எவ்வாறு கையாளுவது, கல்விசார் தொழிநுட்ப வசதிகளை எப்படி பயன்படுத்துவது ஹைடெக் ஆய்வகங்களை பயன்படுத்துதல், EMIS இணையதளத்தில் எப்படி தரவுகளை பதிவேற்றம் செய்வது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் – இன்று முதல் தொடக்கம்!! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3mnnHEa
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture