தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கி உள்ளது. இதற்கு ஆர்வமுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் வரவேற்பு:
கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். பல்வேறு கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவர் சேர்க்கை தொடங்கியது. அது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி – விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!
இந்த பல்கலைக்கழகம் தற்போது தொலைதூர கல்வி முறையில் 58 படிப்புகளை வழங்கி வருகிறது. இதில், 29 இளநிலை, 19 முதுநிலை, 10 பட்டயம், தொழில் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் அடங்கும். மற்ற பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இணையான கல்வியை வழங்கும் நோக்கில் அதிகமான படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொலைதூர கல்வி முறையில் பட்டம் பெறுவதன் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைக்காது என கூறப்பட்டு வந்தது.
பாரதி கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட வீடியோ – “வாடா ராசா” பாடலுக்கு ஆட்டம்!
தமிழக அரசின் ஆணையின் படி, திறந்தநிலை பல்கலையில் படித்து பெற்ற பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் சான்றிதழ்கள், அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்கள் என்றும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்கள் இதை சேர்ந்து பயன் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.tnou.ac.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் அல்லது 93459 13378, 93459 13376 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என பதிவாளர் தெரிவித்து உள்ளார்.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3j4UDPR
via IFTTT
No comments:
Post a Comment