கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு!
கொரோனா பேரலையால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக உதவித்தொகை வழங்கி வந்த நிலையில், அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 1% இடஒதுக்கீடு வழங்கப்படும் என மஹாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.
இட ஒதுக்கீடு:
இந்தியாவில் உருவான கொரோனா முதலாம் மற்றும் 2 ஆம் அலையால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றளவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதிலும் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும், சில குழந்தைகள் தங்களது பெற்றோரையும் இழந்தது தவித்து வருகின்றனர். குறிப்பாக பெற்றோரை இழந்த குழந்தைகளது எதிர்கால வாழ்க்கை என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அந்த வகையில் பல குழந்தைகள் வீடுகள் இல்லாமல், ஆதரவு கரங்கள் இல்லாமல் இன்னலில் உழன்று வருகிறார்கள். இதனிடையே இப்படிப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு ரூ.4000 போனஸ் – மாநில அரசு அறிவிப்பு!
அந்த வகையில் கொரோனாவால் பெருமளவு பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவிலான குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தனித்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நிவாரணமாக உதவித்தொகை வழங்கிய மாநில அரசு தற்போது கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சயோமதி தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் 41,195 பேருக்கு கொரோனா தொற்று – 490 உயிரிழப்பு!
அதன் படி கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதாகவும், அதுவே OBC பிரிவை சேர்ந்த குழந்தைகள் உரிய ஆவணங்கள் இல்லாமலும் இந்த சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, தந்தை வழி உறவினர்கள் இருந்தால் அப்படிப்பட்டவர்களுக்கு கல்வியில் மட்டும் 1% இட ஒதுக்கீடு கொடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3m07Lrk
via IFTTT
No comments:
Post a Comment