தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Friday, August 13, 2021

நாளை திமுக ஆட்சியில் முதல் பட்ஜெட் அறிக்கை – நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல்!

நாளை திமுக ஆட்சியில் முதல் பட்ஜெட் அறிக்கை – நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல்!

ஆகஸ்ட் 13ம் தேதியான நாளை தமிழக சட்டப்பேரவையில் 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய இருக்கிறார்.

பட்ஜெட் தாக்கல்:

தமிழகத்தில் கடந்த மே மாதம் திமுக தலைமையிலான அரசு அமைத்தது. தமிழக முதல்வராக முக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். முதல்வரின் அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். தமிழக நிதி அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதவியேற்றுள்ளார். இவர் நிதி நிர்வாகம் சார்ந்த துறையில் பல பட்ட படிப்புகளை வெளிநாடுகளில் படித்தவர். அமெரிக்க முன்னணி நிறுவனத்தின் நிதி ஆலோசகராக இருந்தவர்.

IND vs ENG 2வது டெஸ்ட் – ரோஹித் மற்றும் ராகுல் கூட்டணி சதமடித்து 69 வருட சாதனை முறியடிப்பு!

இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து முதன் முறையாக நாளை (ஆகஸ்ட் 13)ம் தேதி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, இதைத்தொடர்ந்து தமிழகத்தின் 2021-2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்வதற்கான பணிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தினசரி, ஒவ்வொரு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் முதல்வர் ஆலோசனை நடத்தி வந்தார்.

TN Job “FB  Group” Join Now

பட்ஜெட் தாக்கல் நாளை காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடக்க இருக்கிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று முன்தினம் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. அதன்படி, செப்டம்பர் மாதம் 21ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு பிறகான முதல் பட்ஜெட் அறிக்கை என்பதால் பட்ஜெட் குறித்து மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post நாளை திமுக ஆட்சியில் முதல் பட்ஜெட் அறிக்கை – நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல்! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/2Xi0uJ3
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture