தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு – முதல்வரின் சிறப்பு விருதுகள்!
தமிழகத்தில் உள்ள சிறந்த மற்றும் தூய்மையான மாநகராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு பரிசு தொகை வழங்கி வருகிறது தமிழக அரசு. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த மாநகராட்சி:
தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படும் மாநகராட்சிகளில் உள்ள சிறந்ததாக ஒரு மாநகராட்சி ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நெற்களஞ்சியத்திற்கும், தலையாட்டி பொம்மைகளுக்கும் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் தற்போது சிறந்த மாநகராட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
ஆகஸ்ட் 13 UAE பறக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – சென்னையில் களமிறங்கிய கேப்டன் தோனி!
ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த சிறந்த மாநகராட்சி பட்டமானது அந்த மாநகராட்சியின் சுற்றுச்சூழல், மக்களின் வாழ்க்கை முறை, பொருளாதார சூழல் மற்றும் நிர்வாகம் போன்ற பல காரணங்களை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படும். இவை அனைத்திலும் சிறந்து விளங்கிய காரணத்தால் இந்த ஆண்டுக்கான சிறந்த மாநகராட்சி எனும் படத்தை தஞ்சாவூர் தட்டி செல்கிறது. மேலும் தஞ்சாவூர் மாநகராட்சி கௌரவிக்கும் விதமாக ரூ.25 லட்சம் பரிசுத் தொகையை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சுதந்திர தின விழாவில் வழங்கவுள்ளார்.
பல்லவன், வைகை ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இதனை தொடர்ந்து சிறந்த நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நகராட்சியாக உதகை, திருச்செங்கோடு, சின்னமனூர் ஆகியனவும், சிறந்த பேரூராட்சிகள் கல்லக்குடி, மேல்பட்டம்பாக்கம், கோட்டையூர் ஆகியனவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட தஞ்சாவூருக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகையை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சுதந்திர தின விழாவில் வழங்கி கௌரவிப்பார்.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு – முதல்வரின் சிறப்பு விருதுகள்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3CyqP65
via IFTTT
No comments:
Post a Comment