ஆகஸ்ட் 13 UAE பறக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – சென்னையில் களமிறங்கிய கேப்டன் தோனி!
அடுத்த மாதம் 19 ஆம் தேதி முதல் UAE ல் நடைபெறவுள்ள IPL போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான டோனி சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பெரும் உற்சாகம் கொடுத்து வரவேற்றுள்ளனர்.
IPL போட்டிகள்:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் (BCCI) நடத்தும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் 20 ஓவர் ஆட்டம் கொண்ட ஒரு தொழில்முறை கிரிக்கெட் போட்டி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வரும் இந்த போட்டிகளில் எட்டு வெவ்வேறு இந்திய நகரங்களை அடிப்படையாகக் கொண்ட, எட்டு அணிகள் கலந்து கொண்டு வருகிறது. இந்த IPL போட்டிக்கான சிறப்புகளை பொருத்தளவு உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு வீரர்கள் கலந்து கொள்ளும் ஒரு கிரிக்கெட் லீக் ஆகும். இந்த போட்டிக்கு இந்திய அளவில் பெருமளவு ரசிகர்கள் உள்ளனர்.
பல்லவன், வைகை ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இந்தியாவில் IPL போட்டிகள் இதுவரை 13 சீசன்களாக நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் கடந்த ஆண்டுக்கான பட்டத்தை நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. இதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நடைபெற்று வந்தது. அப்போது இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்து வந்து கொண்டிருந்த சூழலில், சில கிரிக்கெட் வீரர்களும் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். அதனால் இப்போட்டிகள் மே மாதம் முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்ட்டது.
இதை தொடர்ந்து IPL போட்டிகளில் மீதமுள்ள ஆட்டங்களை ஐக்கிய அரபு எமீரகத்தில் வைத்து நடத்த திட்டமிட்ட BCCI, போட்டிக்கான அட்டவணைகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த வகையில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான டோனி சென்னைக்கு வருகை தந்துள்ளார். IPL போட்டிகளில் தற்போது முதன்மை இடத்தை வகித்திற்கும் CSK அணி வீரர்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மது வாங்க ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் – மாநில அரசு உத்தரவு!
இருப்பினும் CSK வீரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர்களுக்கு சென்னையில் முகாம் இருக்காது. அந்த வகையில் CSK அணியில் உள்ள இந்திய வீரர்கள் அனைவரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்வார்கள் என சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் டோனியின் சென்னை வருகையை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். செப்டம்பர் 19 அன்று துவங்கும் போட்டிகளில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சூப்பர் கிங்ஸ் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post ஆகஸ்ட் 13 UAE பறக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – சென்னையில் களமிறங்கிய கேப்டன் தோனி! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3xHgRvb
via IFTTT
No comments:
Post a Comment