சென்னைவாசிகள் கவனத்திற்கு, போக்குவரத்து மாற்றம் – சுதந்திர தினவிழா ஒத்திகை எதிரொலி!
ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை போக்குவரத்தில் ஒரு சில மாறுதல்கள் அமல்படுத்தப்படுகிறது. அது குறித்த விவரங்களை காவல்துறை வெளியிட்டு உள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
75வது சுதந்திர தினவிழா வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அணிவகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். அதற்கான முன்னேற்பாடு ஒத்திகை பணிகள் நடைபெறவுள்ளதன் காரணமாக சென்னை போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. காலை 7 மணி முதல் 10 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்ட பாதைகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒரே நாளில் 41,195 பேருக்கு கொரோனா தொற்று – 490 உயிரிழப்பு!
நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னம் முதல் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையின் வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடி மர சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
காமராஜர் சாலை, ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம் வழியாக செல்லும் வகையில் அதேபோல் பாரிமுனை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் வடக்கு கோட்டை பாகசாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அண்ணா சாலையில் இருந்து கொடி மர சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், என்.எப்.எஸ். சாலை வழியாகவும், முத்துசாமி சாலையில் இருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post சென்னைவாசிகள் கவனத்திற்கு, போக்குவரத்து மாற்றம் – சுதந்திர தினவிழா ஒத்திகை எதிரொலி! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3CIt86o
via IFTTT
No comments:
Post a Comment