ஆப்கானிஸ்தானில் நடைமுறைக்கு வரும் ஷரியத் சட்டம், ஜனநாயகம் இல்லை – தாலீபான்கள் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியமைத்துள்ளதான தாலீபான்கள், அந்நாட்டு அரசை அவர்களே நிர்வகிப்பதாகவும், இனி ஜனநாயகம் இல்லை என்றும், இஸ்லாமிய ஷரியத் சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
தாலீபான்கள் கட்டுப்பாடு
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் முக்கியமான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானை, கிளர்ச்சியாளர்கள், தீவிரவாதிகள் என்று கருதப்படும் தாலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானை இஸ்லாமியர்களின் நாடாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் சுமார் 20 ஆண்டுகளாக அந்நாட்டு அரசுடன் போர் செய்து வந்த தாலீபான்கள் சமீபத்தில் அந்நாட்டை தன் வசமாக்கினர். இதை தொடர்ந்து இதுவரை இருந்த ஜனநாயக ஆட்சியை கலைத்துள்ளதான தாலீபான்கள் தற்போது இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழக அரசின் மானிய விலை இரு சக்கர வாகனம் (ம) மடிக்கணினி திட்டங்கள் ரத்து – வெளியான தகவல்!!
இது தொடர்பாக பேசிய தாலீபான்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான வாஹிதுல்லா ஹாஷ்மி, ‘ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் விமானிகள், ராணுவ வீரர்களை பணியில் சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. இந்நாட்டை இனி தாலீபான்களின் ஆட்சி மன்ற குழுத்தலைவர் ஹிமத்துல்லா ஹகும்சலா தலைமை ஏற்று நடத்துவார். அவருக்கு அடுத்ததாக அதிபர் பதவியை யாரேனும் வகிப்பார்கள். ஆப்கானிஸ்தானில் இனி ஜனநாயகம் இல்லை. இஸ்லாமிய ஷரியத் சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
இந்த சட்டத்தை அமல்படுத்துவத்தின் மூலம் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக கருதப்பட்டிருந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற துவங்கியுள்ளனர். அந்த வகையில் கனடா வரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 21,000 மக்களை ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அதே நேரத்தில் காபூலை விட்டு வெளியேறும் மக்களை தாலீபான்கள் தடுப்பதாக குற்றம் சாட்டிய அவர், தாலீபான்களின் ஆட்சியை அரசாக அங்கீகரிக்க முடியாது எனவும், பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானின் முடிவு ஒருதலை பட்சமானது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
இதனிடையே அந்நாட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரது பாதுகாப்பை தாலீபான்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர்களுக்கான கல்வி, உரிமை, பாதுகாப்புக்கு அவர்கள் உத்திரவாதம் அளிக்க வேண்டும் எனவும் 21 உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, பிரேசில் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளான நாடுகளும் அடங்கும். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதுள்ள நிலவரத்தை குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமை நாடுகள் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post ஆப்கானிஸ்தானில் நடைமுறைக்கு வரும் ஷரியத் சட்டம், ஜனநாயகம் இல்லை – தாலீபான்கள் அறிவிப்பு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/2XttEoH
via IFTTT
No comments:
Post a Comment