தமிழக அரசின் மானிய விலை இரு சக்கர வாகனம் (ம) மடிக்கணினி திட்டங்கள் ரத்து – வெளியான தகவல்!!
தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட மானிய விலையில் இரு சக்கர வாகனம் மற்றும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டங்களை திமுக அரசு ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்த நிலையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டன. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாரத பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனத்தின் விலையில் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 மானியமாக வழங்கப்பட்டு வந்தது.
2980 பேர் விண்ணப்பித்த கட்டாய கல்வி உரிமை சட்டம் – குலுக்கல் முறையில் இன்று தேர்வு !
இந்த திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்தது. மார்ச் 2020 வரை இந்த திட்டத்தின் கீழ் 2.07 லட்சம் வாகனங்கள் ரூ.468.75 கோடி செலவில் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று சில மாதங்கள் ஆன நிலையில், இந்த திட்டத்தை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மாநகர பேருந்தில் பெண்களுக்கான இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்வு காரணமாகவும் இந்த திட்டத்தை கைவிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதே போல பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்கு பதிலாக ரூ.670 கோடி மதிப்பில் டேப் வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சார்ந்த 5.6 மில்லியன் ஏழை எளிய குடும்பங்கள் நலனுக்காக முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் மறுசீரமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post தமிழக அரசின் மானிய விலை இரு சக்கர வாகனம் (ம) மடிக்கணினி திட்டங்கள் ரத்து – வெளியான தகவல்!! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3xZAOh9
via IFTTT
No comments:
Post a Comment