கோயில் சிறப்பு காவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
கோவை மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் காலியாக உள்ள 127 சிறப்பு காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காவலர் பணி:
தமிழகத்தில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் விளைவாக ஏராளமானோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய இயலாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது அரசு தளர்வுகள் அளித்தாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வணிக நிலை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாலையோர வியாபாரிகள் வருமானம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருகிறது. இதனை போக்கும் விதமாக அரசு மற்றும் தனியார் துறைகள் புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து அறநிலையத்துறை கோயில் சிறப்பு காவலர் பணியிடங்களை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள 127 சிறப்பு காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
தமிழக கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி – விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!
இதற்கு முன்னாள் படைவீரர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். இரவுக் காவலர் பணிக்கு 65 வயது வரை உள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7,300 வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரர்கள், கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post கோயில் சிறப்பு காவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3mj14kr
via IFTTT
No comments:
Post a Comment