தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Sunday, August 08, 2021

Amazon நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு – ஊழியர்களுக்கு ஜாக்பாட்!



Amazon நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு – ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

கொரோனா தடுப்பூசி:

கொரோனா தொற்று பரவலை எதிர்த்து உலகம் முழுவதும் போராடி வருகிறது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. பல வழிகளிலும் மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தை அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தனியார் நிறுவனங்களும் தனது வாடிக்கையாளர்களுக்கு தடுப்பூசி போட வலியுறுத்தி வருகின்றது. அந்த வகையில், அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினால் பல அதிரடி சலுகைகளை வழங்குகிறது.

அதன் படி தடுப்பூசி போடுக் கொண்ட அதன் ஊழியர்களுக்கு, ஒரு லாட்டரி முறையில் பரிசினை அறிவித்துள்ள்ளது. இந்நிறுவனம் மேக்ஸ் யுவர் வாக்ஸ் என்ற போட்டியினை தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் நிறுவனத்தின் பணியாளர்கள் லாகிஸ்டிக்ஸ் ஊழியர்கள், அதன் உணவு சந்தையில் பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஏறக்குறைய 2 மில்லியன் டாலர் மதிப்புடைய 18 பரிசுகளை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த போட்டியில் 2 பேருக்கு 5,00,000 டாலர்களும், ஆறு பேருக்கு 1,00,000 டாலர்களும், புதிய வாகனங்கள், 5 விடுமுறை பேக்கேஜ்கள் என பல சலுகைகளை அறிவித்துள்ளது. டிஸ்னி மற்றும் வால்மார்ட் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்களும் ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என அறிவித்துள்ளது. எனினும் அமேசான் இதுவரையில் கட்டாயம் என அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி நிறுவனங்களான ஆல்பாபெட் இன்க், கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டாயம் தடுப்பூசியை போட்டுக் கொண்டு அலுவலகத்திற்கு வர கூறியுள்ளது.


The post
Amazon நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு – ஊழியர்களுக்கு ஜாக்பாட்! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3xw8B16
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture