‘பிரதம மந்திரி கிசான்’ திட்டத்தின் 9ம் தவணை ரூ.19,500 கோடி – பிரதமர் மோடி விடுவிப்பு!
இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டு தோறும் சுமார் ரூ.6,000 நிதியுதவி மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதன் 9 வது தவணை நிதி ரூ.19.500 கோடி பிரதமர் மோடி அவர்களால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
உதவித்தொகை:
நாட்டில் நலிந்த விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் 3 தவணையாக ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படும். மத்திய அரசு விவசாயிகளின் நேரடி வங்கி கணக்கில் இந்த தொகையை வழங்கும். பிஎம் கிசான் திட்டத்தின் எட்டாவது தவணைப் பணத்தை சுமார் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு சமீபத்தில் தான் டெபாசிட் செய்தது. இதுவரை 8 தவணைகளாக 1.38 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் கொரோனா 3ம் அலை – மாவட்ட கொரோனா தடுப்பு அலுவலர் தகவல்!
இந்த திட்டத்தின் 9ம் தவணை ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டது. அதன்படி, இன்று காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். அதில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 75 வது சுதந்திர தின விழா நாட்டில் கொண்டாடப்பட உள்ள நிலையில், அடுத்த 25 ஆண்டுகள் நாம் நமது நாட்டை எப்படி பார்க்க விரும்புகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
TN Job “FB Group” Join Now
உலகின் மாறி வரும் தேவைகளை இந்திய விவசாயிகள் தீர்க்க முன் வரவேண்டும். மேலும், நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கவும், இதனால் சிறிய அளவிலான விவசாயிகளுக்கு பலனளிக்கும் என்றும், விவசாயிகளின் சிரமத்தை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் பிரதமர் கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சியில், பிரதமரின் கிசான் திட்டத்தில் 9ம் தவணை ரூ.19,500 கோடியை பிரதமர் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், 9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் பயனடைவார்கள்.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post ‘பிரதம மந்திரி கிசான்’ திட்டத்தின் 9ம் தவணை ரூ.19,500 கோடி – பிரதமர் மோடி விடுவிப்பு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3fPxRJE
via IFTTT
No comments:
Post a Comment