கோவிலுக்கு செல்லும் சரவணன், சந்தியா இடையே வெளிப்படும் காதல் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணனும் சந்தியாவும் கோவிலுக்கு பஸ்சில் கிளம்புகின்றனர். அப்போது சந்தியாவிடம் ஒருவன் தப்பாக நடந்துக் கொள்கிறார். அதை பார்த்து சரவணன் கோபப்படுகிறார். பின்னர் சந்தியாவும் சரவணனும் அருகில் அமர்ந்துக் கொள்கின்றனர்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரவணனும் சந்தியாவும் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்கின்றனர். ஆட்டோ வந்து ரெடியாக இருக்க சிவகாமியிடம் சரவணனும் சந்தியாவும் தனியாக ஏன் அனுப்புகிறாய் என்று கேட்கிறார். பூசாரியிடம் போன் செய்து ஏற்பாடு செய்ய சொல்லிட்டியா என்று கேட்கிறார். எல்லாம் சொல்லிட்டேன் இவங்க போய் பொங்கல் வைத்தால் போதும் என்று சொல்கிறார்.
சந்தியாவும் சரவணனும் ஆட்டோவில் கிளம்ப சிவகாமி வழி அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது சந்தியாவும் சரவணனும் நெருக்கமாக அமர்ந்துள்ளனர். சந்தியாவின் வளையலை பார்த்து சரவணன் ரசிக்கிறார். சரவணன் தனது மெட்டியை கையில் மாட்டிருந்தார். இப்போது அதை காணவில்லை என்று சந்தியா கேட்கிறார்.
செப். 1 முதல் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
சந்தியா பிரிய போகிறார் அப்பறம் எதற்கு மெட்டி போட வேண்டும் என்று சரவணன் நினைக்கிறார். பின்னர் இருவரும் ஆட்டோவில் இருந்து இறங்கி பஸ்சில் ஏறுகின்றனர். கூட்டமாக இருப்பதால் நின்றுக் கொண்டு செல்கின்றனர். அப்போது ஒருவன் சந்தியாவிடம் தவறாக நடந்து கொள்கிறார். சந்தியாவை உரசி செல்ல சரவணன் அவனை பார்த்து சண்டை போடுகிறார். உன் பொண்டாட்டியை தொட கூடாது என்றால் அவளை காரில் கூட்டிக் கொண்டு போ என்று சொல்கிறார்.
பின்னர் சந்தியாவை யாரும் தொடாமல், பாதுகாப்பாக இருக்கிறார். சந்தியா அதை நினைத்து சந்தோசப்படுகிறார். பின்னர் இருவரும் அருகே அமர தண்ணீர் வேண்டும் என சந்தியா எழுந்து வெளியே செல்கிறார். பேருந்து கிளம்ப சந்தியா இன்னும் வரவில்லை என சரவணன் பதட்டமடைகிறார். ஓட்டுனரை வண்டியை நிறுத்த சொல்ல சந்தியா பின்னாடி பக்கம் ஏறிவிட்டு சரவணனை கூப்பிடுகிறார்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுமுறை – அரசு உத்தரவு!
அப்போது தான் சரவணனன் நிம்மதி அடைகிறார். சுற்றி இருப்பவர்கள் சந்தியாவை காணாமல் உன் புருஷன் தவித்து போனான் என்று சொல்கிறார். சந்தியா அதை கேட்டு சந்தோசப்படுகிறார். சரவணன் பேருந்தில் தூங்க சந்தியா அவரை தோளில் சாய்த்துக் கொள்கிறார். போனில் அவர் படுத்திருப்பதை போட்டோ எடுத்து ரசிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post கோவிலுக்கு செல்லும் சரவணன், சந்தியா இடையே வெளிப்படும் காதல் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3g1jRgd
via IFTTT
No comments:
Post a Comment