100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு தங்க பதக்கம் – நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஈட்டி எறிதல் ஆடவர் பிரிவில் இறுதி சுற்றுப் போட்டியில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டருக்கு தூரம் ஈட்டி எறிந்து 100 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் தடகள போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
நீரஜ் சோப்ரா :
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பங்கேற்று உள்ளனர். இந்தாண்டு இந்தியாவில் இருந்து 127 வீரர்கள் 18 போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில் ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஜெர்மனி, பெலாரஸ், பாகிஸ்தான் போன்ற நாட்டு வீரர்கள் நீரஜ் சோப்ராவுடன் போட்டியிட்டனர்.
அண்ணாமலை பல்கலை சார்பில் 6 சட்டக் கல்லூரிகள் – தமிழக அரசு முடிவு!
அதில் நீரஜ் சோப்ரா தன் நம்பிக்கையுடன் தொடர்ந்து விளையாடி அசத்தினார். இறுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் 87.03 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இரண்டாம் ஆட்டத்தில் 87.58 மீட்டர் மூன்றாம் ஆட்டத்தில் 76.79 என தொடர்ந்து அடுத்தடுத்து சுற்றுகளில் முன்னிலை வகித்தார். இறுதியாக ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். இதன் மூலம் 100 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
TN Job “FB
Group” Join Now
ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் 2017ல் புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டிலும் தங்கம் வென்று சாதனை படைத்தவர். அதனை தொடர்ந்து தற்போது ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என 7 பதக்கங்களை பெற்றுள்ளது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு தங்க பதக்கம் – நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3s1esdH
via IFTTT
No comments:
Post a Comment