தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Monday, August 09, 2021

தமிழக அரசின் 10 ஆண்டுகால நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு – Live Updates!

தமிழக அரசின் 10 ஆண்டுகால நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு – Live Updates!

தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி பட்ஜெட் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதனை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய நமது வலைத்தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

வெள்ளை அறிக்கை – Live Updates:

  • தமிழ்நாடு அரசின் 120 பக்கங்கள் கொண்ட நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு
  • தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது.
  • தமிழகத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் தன்மை குறைந்து வட்டி அதிகரித்துள்ளது.
  • 2020-21 இடைக்கால பட்ஜெட்டின் படி தமிழகத்தின் கடன் சுமை ரூ.5,70,189 கோடி
  • 2020-21ம் நிதியாண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாகுறை ரூ.61,320 கோடி
  • கடந்த 5 ஆண்டுகளில் ரூ.39,079 கோடி மறைமுக கடனாக எடுக்கப்பட்டு உள்ளது.
  • தற்போதைய வருமானம் உற்பத்தியில் 4.65% ஆக சரிந்துள்ளது.
  • அதிமுக ஆட்சியில் 2011-16ல் வருவாய் பற்றாக்குறை ரூ.17,000 கோடியாக இருந்தது.
  • அதிமுக ஆட்சியில் 2016-21ல் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்தது.
  • முந்தைய திமுக ஆட்சியில் 13.89% ஆக இருந்த வருமானம், அதிமுக ஆட்சியின் இறுதியில் 4.65% ஆக சரிவு.
  • 4 வழிகளில் தமிழக அரசுக்கு வருமானம் வருகிறது. அவை மாநில வரி, வரியில்லா வருவாய், மத்திய அரசின் வரிப்பங்கீடு, திட்ட மானியம்.
  • டான்ஜெட்கோ 90%, போக்குவரத்து கழகங்கள் 5% கடன் பெற அதிமுக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
  • தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.92,305 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
  • மாநில வரி வருவாயில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு இருக்கிறது.
  • கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% ஆக சரிந்துள்ளது.
  • திமுக ஆட்சியில் மாநில வரிவருவாய் வளர்ச்சி 11.4% ஆக உயர்ந்துள்ளது.
  • தமிழகத்தில் மொத்த உற்பத்தி 8.7% ஆக குறைந்துள்ளது.
  • தமிழக அரசின் வருமானம் பெருமளவு சரிந்துள்ளது. இதனை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டு உள்ளன.
  • வாகன வரி கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் மாற்றப்படவே இல்லை.
  • வரி அல்லாத வருமானம் முந்தைய திமுக ஆட்சியில் 1% ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 0.7% ஆக குறைந்தது.

 appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3lMayEC
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture