*ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு*
*கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியிடம் உள்பட ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பிப்பதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது*
*புதன்கிழமையுடன் (நவ. 29) தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புயல் பாதிப்பு காரணமாக விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது*
*இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு*
*கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், வரைவாளர் மூன்றாம் நிலை ஆகிய காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த புதன்கிழமை கடைசி நாளாகவும், தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை அலுவலர் உதவி இயக்குநர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க நவம்பர் 21-ஆம்*
*தேதியும், இந்து சமய* *அறநிலையத் துறை செயல் அலுவலர் நிலை எண் 3 மற்றும் 4 காலிப்* *பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் *3-ஆம் தேதியும் கடைசி நாளாக*
*அறிவிக்கப்பட்டிருந்தது*
*கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் நலன்கள் கருத்தில் கொள்ளப்பட்டது*
*இதையடுத்து, ஐந்து பதவிகளிலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 10 ஆகும். தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 12-ஆம் தேதி கடைசி நாளாகும்*
*தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிக்கப்பட்ட போதிலும், தேர்வுகள் நடைபெறும் நாள்களில் மாற்றம் ஏதுமில்லை என்று டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்*
*SOURCE DINAMANI WEBSITE*
No comments:
Post a Comment