தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Wednesday, October 18, 2023

EE | class 1-3 | Term 2 | FA(b) & SA Test schedule

1முதல் 3 வகுப்பு - இரண்டாம் பருவம் - வளரறி(ஆ) மற்றும் தொகுத்தறி மதிப்பீட்டிற்கான கால அட்டவணை. 

Click here to Download pdf 



Saturday, April 29, 2023

உ.வே.சா | தமிழ்த் தாத்தா

 


*தமிழ்த் தாத்தா* 

*உ.வே.சா அவர்களின் நினைவேந்தல்.*

(கிபி1942 ஏப்ரல் 28)

✍️உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன் என்பதாகும்.

✍️இவரின் ஆசான் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.

✍️அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர்.

✍️தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தவர்.

✍️சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என 90க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளில் இருந்து நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து பாதுகாத்து அடுத்த தலைமுறை அறியும் வகையில் தந்தவர்.

✍️பல அரிய தமிழ் ஓலைச்சுவடிகளை திரட்டி அவற்றை தொகுத்து பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற பல சங்க நூல்களை ஓலைச் சுவடியிலிருந்து அச்சு வடிவில் கொண்டுவர அரும்பாடுபட்டார்.

✍️உவேசா அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தும் விதமாக 2006 ல் நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.

✍️1942 ல் உவேசா பெயரில் சென்னையில் அமைக்கப்பட்ட நூலகம் இன்றும் செயல்படுகிறது.


Thursday, April 13, 2023

இரண்டு மெய்யெழுத்துக்கள் சேர்ந்து வருமா?

 *இரண்டு மெய்யெழுத்துகள் சேர்ந்து வருமா* ? 



தமிழில் புள்ளியுடைய இரண்டு மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருமா ? வரும் என்றால் எங்கே வரும் ?


இந்த ஐயத்திற்குப் பலரிடையே தெளிவான அறிதல் இல்லை. தற்போது பரவலாகப் பரவி வரும் பிழைகளில் இரட்டை மெய்யெழுத்துகளைத் தயங்காமல் இடுவதும் ஒன்று.


’கற்ப்பதற்கு’ என்று எழுதுகிறார்கள். ‘அதற்க்காக’ என்று எழுதுகிறார்கள். ‘முயற்ச்சி’ என்றுகூட எழுதுகிறார்கள். இவை முற்றிலும் பிழையானவை.


ஒரு வல்லின மெய்யெழுத்தினை அடுத்து இன்னொரு தனி மெய்யெழுத்து வரவே வராது. கற்பதற்கு, அதற்காக, முயற்சி என்று எழுதுவதுதான் சரி.


தற்காலக் கதாசிரியர்கள் சிலர் சொல்ப்படி, அல்ப்பம், கல்க்கண்டு என்றுகூட எழுதுகிறார்கள். அவர்கள் எழுதுவதும் பிழையே.


அப்படியானால் தமிழில் இரண்டு மெய்யெழுத்துகள் ஒன்றாக வருவதில்லையா ? இரண்டு மெய்யெழுத்துகளைச் சேர்ந்தாற்போல் பார்த்த நினைவிருக்கிறதே.


உண்மைதான். தமிழில் இரண்டு மெய்யெழுத்துகள் சேர்ந்து வருவதும் உண்டு. ஆனால், அவை மூன்றே மூன்று மெய் எழுத்துகளை அடுத்துத்தான் வரும். வல்லின மெய்யை அடுத்து வரவே வராது.


அம்மூன்று எழுத்துகள் எவை ? ய், ர், ழ் ஆகியவையே அம்மூன்று மெய்கள். அம்மூன்று இடையின மெய்களை அடுத்து மட்டுமே இன்னொரு ஒற்றெழுத்து புள்ளியோடு வரலாகும்.


திருக்குறளிருந்தே எடுத்துக்காட்டினைக் காண்போம்.


அடக்கம் அமரருள் உய்க்கும் – ய்க் என இரண்டு மெய்கள்


செல்வத்தைத் தேய்க்கும் படை


அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து


(தேய்ந்து, ஓய்ந்து, ஆராய்ந்து, ஆராய்ச்சி என வருதல் காண்க.)


தாள் சேர்ந்தார்க்கல்லால் – ர்ந் என இரண்டு மெய்கள்


சேர்ந்தார்க்கு – ர்க் என இரண்டு மெய்கள்


எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு


(உயர்ச்சி, தளர்ச்சி, அவர்க்கு, பயிர்ப்பு, உயர்த்தினர் என வருதல் காண்க.)


நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி – ழ்ச் இரண்டு மெய்கள்


தாழ்ச்சியுள் தங்குதல் தீது


அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு – ழ்ந் என இரண்டு மெய்கள்


(மகிழ்ச்சி, நிகழ்ச்சி, சூழ்ச்சி என வருதல் காண்க.)


ஆகவே, ய் ர் ழ் ஆகிய மெய்களை அடுத்துத்தான் இன்னொரு தனி மெய்யெழுத்து தோன்றுமேயன்றி வேறெங்கும் தோன்றாது.


- *கவிஞர்* *மகுடேசுவரன்*💐💐💐💐💐அன்பும் மகிழ்வும் பகிர்தல் சுகமே..😊❣️💐💐💐 மகிழ்ச்சி வாழ்க நலமுடன் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture