தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி
Showing posts with label ரயில்வே. Show all posts
Showing posts with label ரயில்வே. Show all posts

Wednesday, March 06, 2019

ரயில்வே துறையின் முறைகேடு

*சென்னையில் நடந்த ரயில்வே துறை குரூப் டி தேர்வு முடிவுகளால் அதிர்ச்சி: தேர்வில் முறைகேடு என புகார்!*

சென்னை:

சென்னையில் நடைபெற்ற ரயில்வே துறை குரூப் டி தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ரயில்வே துறையில் குரூப் டி பிரிவில் மொத்தம் 62,907 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு எழுத்து தேர்வு நடைபெற்றது. செப்டம்பர் 17 முதல் டிச.17ம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வுக்காக இந்தியா முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். சென்னையில் மட்டும் 16 மண்டலங்களில் 1550 பணியிடங்கள் நிரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 4ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முடிவுகள் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. வடமாநிலத்தவர்களின் மதிப்பெண்ணை ஆய்வு செய்ததில் தேர்வில் மோசடி நடைபெற்று இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 100 என்று இருக்கும் நிலையில் கவுகாத்தி, சண்டிகர், அகமதாபாத் போன்ற வடமாநில நகரங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 102, 109, 354 என மதிப்பெண்களை வாரி வழங்கி இருக்கின்றனர். தமிழகத்தின் சென்னை மண்டலத்தில்  நடத்தப்பட்ட எழுத்து தேர்வில், தமிழக வரலாறு, கலாச்சாரம், இயற்கை அமைப்புகள் குறித்த கேள்விகள் அதிகம் இடம் பெறுவது வழக்கம். அதனைப் புரிந்து கொண்டு தேர்வு எழுதி வடமாநிலத்தவர்கள் வெற்றி பெறுவது எளிதானது அல்ல என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது நடைபெற்ற குருப் டி தேர்வில் 90% வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பதாக தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நியாயமான முறையில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture