தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, July 28, 2019

திருமருகல் குருநாதன் கவிதைகள்

மின்னூல் மூலமாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்

கண்கள் தாண்டி மனதுள் விழுந்த தூறல்கள்






110 . தலைப்பு.
********************
மண்ணிதை உயர்த்தி
மானிடத்தில் சிறந்த
விண்கலப் பறவை
விண்ணில் பறந்தது
அறிவால் சிறந்த
அக்கினிச் சிறகு
செறிவால் உயர்ந்த
சிந்தனைச் சிற்பி .
ஏழை குலத்தின்
இனிய தோன்றல்
பேழை அறிவின்
பெரிய முதல்வர்  .
இந்திய நாடு
ஏற்றம் பெற்றிட
சிந்தனை யாவையும்
சிந்திய பெரியோர் .
ஏவுகணை தனை
எளிதில் செலுத்தி
மேவும் அறிவியல்
விந்தை புரிந்தவர்.
இரண்டாயிரத்திருபதற்கு
சிறகுகள் வீசி
வலிமைபாரதம்
உதயம் செய்தவர்  .
கேள்வியே ஞானம்
கேள்வியே உயிர்ப்பு
கேள்வியே படி கல்
கேள்விகள் கேளென
மாணவர் செல்வம்
மண்மிசை  உயர
தானே சென்றவர்
தயக்கம் உடைத்தவர்
மென்மைக் குரலில்
மேடையில் பேசுவார்
அன்பைக் குழைத்து
அதனில் வீசுவார் .
ஆயிரம் அறிவியல்
அருமைத்தகவல்கள்
வாயினில் அருவியாய்
வந்திடப் பொழிவார்.
இயற்கை கால்களை
இழந்த பேருக்குச்
செயற்கை கால்களாய்
சிறந்து நின்றவர்
பொக்ரான் குண்டின்
புகையால்  உலகின்
உக்ரப்பார்வையை
ஒதுக்கி வைத்தவர் .
புத்தர் சிரித்ததால்
புன்னகை இந்தியா
சித்தம் மகிழ்ந்தது
சிறப்பு அவர்கரத்தில்.
தமிழனாய்ப் பிறந்து
தரணியோர் போற்ற
குடியரசுத் தலைவராய்
கோலோச்சிச் சிறந்தவர்.
இந்தியத் தலைமகன்
என்ற நிலையிலும்
முந்திடும் பொறுமையில்
முன்னிலை வகிப்பவர்.
சின்னஞ்சிறார்களின்
வண்ணக்கனவினில்
பின்னிக்கிடந்திடும்
பெருமைக்குரியவர்.
எண்ணிலா விருதுகள்
இவர்மடி வீழினும்
எண்ணத்தில் செயல்களில்
கர்வமோ அற்றவர் .
வளரனும் இந்தியா
வல்லரசாகனும்
மலரனும் இந்தியா
மண்ணிதில் உச்சியில்
கல்வியில் மாணவர்
வல்லவராகனும்
அல்லும்பகலுமே
கனவினில் வாழ்ந்தவர் .
************************
திருமருகல் குருநாதன்
*************************















கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture