தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி
Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Monday, February 14, 2022

ஏக்கம்

 



பால.ரமேஷ்.

தினம் ஒரு குட்டிக்கதை.


கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்...


ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.

அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.


திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்.  அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.


என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான்.


கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்.

என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...

அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.


மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் வந்து விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.


அதற்கு அவன்_இல்லை இப்பொது வயதாகி விட்டது_எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,

ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை,.....


மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.


அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல் என்றது.


வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.


மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது.


அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.


மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது. 


அவன் அடி மரத்தை வெட்டும் போது, மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.


ஆனால் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.

அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான்.


அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.


இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை.. கிளைகள் இல்லை.. அடி மரமும் இல்லை.. உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது.


அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.


அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.


இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும்அதுதான்.....


பிடித்திருந்தால் படித்துவிட்டு பகிரவும்...


நன்றி....

பால.ரமேஷ்

Monday, February 07, 2022

அதுவாகவே ஆகிறாய் குட்டிக்கதை


 பால.ரமேஷ்.




தினம் ஒரு குட்டிக்கதை.


🎈அதுவாகவே மாறுகிறாய்🎈


ஒரு சின்ன ஊர் . அங்கே ஒரு பள்ளிக்கூடம் . அதிகமாக யாரும் அங்கே படிக்க வருவதில்லை .


பெற்றோர்களுக்கும் அக்கறை இல்லை .


எதோ பள்ளிக்கூடம் என ஒன்று இருப்பதால் ,தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள் அவ்வளவுதான் .


வகுப்புக்கு வந்த ஒரு மாணவன் மிகவும் மந்தமாக உக்கார்ந்திருந்தான் .


ஆசிரியர் அவனை கவனித்தார் .


" என்னப்பா ... இப்படி உக்கார்ந்திருக்கே ... படிப்பில் கவனமில்லையா ...?


" ஐயா ... என் கவனமெல்லாம் எங்க வீட்டுலேயே இருக்கு !"


"அப்படி என்ன உங்க வீட்டுல இருக்கு ?"


" ஒரு பசுமாடு இருக்கு ! "


என்னப்பா சொல்றே


ஐயா .. நேத்து எங்க அப்பா புதுசா ஒரு பசுமாடு வாங்கிட்டு வந்தார் , அதை எங்க வீட்டு வாசல்ல கட்டி போட்டிருக்கார் .


என் நினைவெல்லாம் பசுமாடு மேலேயே இருக்கு


ஆசிரியர் கோபமடைந்தார் , யோசித்தார் ,


தம்பி ! ஒண்ணு செய்


" நான் உனக்கு ஒரு வாரம் லீவு தர்றேன் .. நீ என்ன பண்ற ... நம்ம ஊர் எல்லையில ஒரு மலை இருக்கே .. அங்க ஒரு குகை இருக்கு ... அதுல போய் உக்கார்ந்துக்க ! ஒரு வாரம் பூரா மாட்டை பத்தியே நினை ... பிறகு வா ...!"


" சரி .. சார் ...! என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட்டான் .


ஆசிரியர் நினைத்து கொண்டார்


" ஆசை தீரும் வரையில் அவன் மாட்டை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பான் . பிறகு கொஞ்ச நேரத்திலேயே மறந்து விடுவான் "


ஒரு வாரம் கழிந்தது .


ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார் .


அந்த மாணவன் வெளியே நின்று கொண்டு இருந்தான் .


அவர் அவனிடம்


" என்னப்பா! மாட்டை பத்தி யோசித்து முடிச்சிட்டியா ? இப்போ மாட்டை பத்தின நினைவில்லையே ?


அவன் இல்லை என தலை ஆட்டினான் .


அப்பறம் ஏன் இன்னும் வெளியே நிக்கிறாய் ?


அவன் சொன்னான் " சார் நான் உள்ளே வரலாம்னு தான் நினைக்கிறேன் , ஆனா என் தலைல இருக்கற கொம்பு உள்ள வர முடியாதபடி மேலே இடிச்சிகிட்டு நிக்குது ".


ஆசிரியர் திகைத்து நின்றார் . மாட்டை பற்றியே சிந்தித்து சிந்தித்து , இவன் தான் அதுவாக மாறிவிட்டதாக உணர்கின்றான் .


ஜென் கதையில தியானம் எப்படி செய்யணும் என்பதற்க்காக தியானத்தை பற்றி இப்படி ஒரு கதையை சொல்வதுண்டு .


நாம யாரை பத்தி அடிக்கடி நினைத்து கொண்டு இருக்கிறோமோ , பேசி கொண்டு இருக்கிறோமோ அவங்களோட குணாதிசயம் நமக்கு வந்துரும் , நாம அவங்களா மாறுகிறோம் .


விவேகானந்தர் கூட சொல்லுவர்


" நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் " என்று .


✒தென்கச்சி கோ .சுவாமிநாதன்

Friday, February 04, 2022

பாசம் குட்டிக்கதை

 


பால.ரமேஷ்.

தினம் ஒரு குட்டிக்கதை .


பாசம்

****


ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது,அவள் பெயர் அனிதா. அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தாள். அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று.


பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப்போகிறான். நீயும் அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க என்று சொல்லியே வளர்த்தார்கள்.


அனிதா அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே டேய் தம்பி சீக்கிரம் வெளியே வாடா நாம ஜாலியா விளையாடலாம் நான் உன்னை யாருக்கும் குடுக்க மாட்டேன், நான் மட்டுமே உன் கூட விளையாடுவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.


அனிதா இன்னும் முகம் பார்க்காத தன் தம்பியிடம் அவ்வளவு பாசமாக இருப்பதை பார்த்து அவள் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அனிதாவுக்கும் தினமும் அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதே வாடிக்கையாக இருந்தது.


நாட்கள் உருண்டோடின பிரசவ வலி எடுக்கவே மருத்துவமனையில் சேர்த்தார்கள்.பிரசவம் நார்மலாக இருக்கும் என்று நினைத்தார்கள் ஆனால் மிக சிக்கலாகி ஆப்ரேஷன் பண்ணிதான் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.மருத்துவர்கள் குழந்தை மிக பலவீனமாக இருக்கிறது இன்னும் சில நாட்களே உயிரோடு இருக்கும் என்று கூறி ICU வில் அட்மிட் பண்ணினார்கள்.


அனிதாவையும் அவள் தந்தையையும், குழந்தையையும் அம்மாவையும் பார்க்க அனுமதிக்கவே இல்லை.பிறகு அனிதாவின் தந்தையை மட்டும் அனுமதித்தார்கள் அவர் உள்ளே சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தார்.


ஒரு வாரம் ஓடி விட்டது அனிதா அடம் பண்ண ஆரம்பித்தாள் நீ மட்டும் பார்த்துட்டு வந்தியே நானும் தம்பியை பார்க்கனும் என்று கத்தினாள்.உன் தம்பி சாமிக்கிட்ட போகபோறான் உன்னை மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கமாட்டாங்கம்மா என்று அவள் அப்பா சொன்னார்.அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவே சரி நாளைக்கு எப்படியாவது உன்னை உள்ளே கூட்டிட்டு போறேன் என்றார்.


மறுநாள் மருத்துவமனயில் அனிதாவையும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டார் ஆனால் குழந்தையை ICU வுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று கூறினார்.பிறகு அவர்கள் கெஞ்சுவதை பார்த்து அனுமதித்தார்கள்.


அனிதா உள்ளே ஓடிச் சென்று குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்தாள்,அவள் கை பட்டதும் குழந்தை லேசாக அசைந்தது. ’டேய் தம்பி எழுந்து வாடா நாம விளையாடலாம்’ என்றாள். குழந்தை லேசாக மூச்சு விட ஆரம்பித்தது. ’உன்னை நான் சாமிக்கிட்ட கொடுக்கமாட்டேன், நானே வச்சுக்குவேன், நீ என் கூடத்தான் இருக்கனும்’ என்றாள். இப்போது குழந்தையின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது.


மருத்துவர்களே ஆச்சரியப்பட்டார்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு இனி நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்றார்கள்.


நாம ஒரு பொருள் மேல உண்மையான பாசம் வச்சிட்டா அந்த ஆண்டவனே நினைச்சாலும் நம்ம கிட்ட இருந்து பிரிக்க முடியாதுங்க...!!


நன்றி : பால.ரமேஷ்.



Wednesday, February 02, 2022

உலகம் ஒரு கண்ணாடி

 

பால.ரமேஷ்.

தினம் ஒரு குட்டிக்கதை .


"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......,

 " தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!!


"அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!


  "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!!


"சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!!


 "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. 


"அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!!


 இருந்தும் கோபம் தாளாமல்.....,


  "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.


"எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!!


 "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"....,

 "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!!


அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. 


உடனே...,

  " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,


  " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!!


 மற்ற நாய்களும் குறைத்தது.


 " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்....,


 " வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்து கொண்டே மயங்கியது"....!!


"இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது".......!!


"இறந்து போன அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால்"........,

 அதற்கு புரிந்திருக்கும். 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


1. தான் நுழைந்தது....,

 " நூற்றுக் கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று "......,


2. தன்னை சுற்றி இருந்தது........,

" தனது பிம்பங்கள் தான் என்று"...., 


3. குரைத்தது சுற்றி இருந்த நாய்கள் அல்ல......,

   "தன் குரலின் எதிரொலி தான் என்று"......, 


        நீதி: 

         `

  " இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது".....!! 

  

 *நாம் கோபப்பட்டால்....,

 " பதிலுக்கு கோபம் கிடைக்கும்".....!!* 


  அன்பு செலுத்தினால்.....,

    " அன்பு கிடைக்கும்"......!!


"நீ எதை விதைக்கிறாயோ"....,

  "அதுவே முளைக்கும்"...!!


நன்றி : பால.ரமேஷ்.


Saturday, January 29, 2022

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்

பால.ரமேஷ். தினம் ஒரு குட்டிக்கதை. கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?? ===================================== கணவன் பால் எனில் அதில் கலக்கப் படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி. பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும்,தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை. பாலை தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை. தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதை தாங்காத முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும். பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும். ஒரு வேளை அப்படி தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி ஊற்றி அடுப்பையே அணைத்துவிடும். கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும். நன்றி:பால.ரமேஷ்

Friday, January 28, 2022

தினம் ஒரு குட்டிக்கதை

பால.ரமேஷ்.



*தினம் ஒரு குட்டிக்கதை* .

யானைப்பாகனிடம் ஒரு கேள்வி ஒன்று கேட்கபட்டது.

இந்த யானையை அதன் காலில் சங்கிலியில் கட்டியிருக்கிறீர்களே அதை அது அறுத்துகொண்டு போகமுடியாதா என்று.
அதற்கு யானைப்பாகன் கூறினார்.அதனால் அறுத்துகொண்டு போகமுடியும் ஆனால் அப்படி போகாது என்றார்.
ஏன் என்று கேட்டபோது,அந்தயானை குட்டியாக இருந்தபோதும் இதேப்போலொரு சங்கிலியால் அதனை காலில் கட்டி போடுவார்களாம்.
அந்த குட்டியும் அதை அறுத்துகொண்டு ஓட எத்தனிக்குமாம்.ஆனால் முயன்று முயன்று போதிய வலு இல்லாத காரணத்தினால் நாளடைவில் அதன் முயற்சியை கைவிட்டு விடுமாம்.நம்மலால் முடியாது என்றொரு மைண்ட்செட்டுக்கு வந்துவிடுமாம்.

அதே குட்டி வளர்ந்து பெரிய யானையாக ஆனப்பிறகு அதனுடைய இப்போதைய வலிமையை உணராமல் தன்னால் முடியாது என்ற பழைய  மனநிலையிலேயே இப்ப உள்ள சங்கிலியை அறுக்க முயலாதாம்.சங்கிலிக்கு பதிலாக ஒரு கயிறு காலில் கட்டபட்டிருந்தாலும் அதனை அறுக்க முயலாதாம்.
 காலில் கட்டபட்டிருந்தால் அங்கேயே நின்னுகொள்ளவேண்டும் என்ற மனநிலைக்கு அது பழகிவிட்டது.
இந்த உதாரணம் யானைக்கு மட்டுமல்ல.நமக்கும் பொருந்தகூடியதே.

எத்தனையோ முயற்சிகளை நாம் நம்முடைய வாழ்நாளில் எடுத்திருப்போம்.அதில் ஒரு சிறு தோல்வி கிடைத்திருந்தாலும்,போச்சி,இனி அவ்ளோதான் என்ற நம்பிக்கை இழப்பு தான் நாம் அதில் வெற்றியை அடையமுடியாமல் விட்டுவிடுகிறோம்.

ஒருவகையில் நாமும் அந்த யானையை போலத்தான்.
எளிதாக அறுத்துவிடக்கூடிய கயிற்றை எப்படி தன்னால் அறுக்கமுடியாது என்ற தன்னுடைய பழைய நம்பிக்கைகுறைவிலேயே இருந்துவிடுகிறதோ அதேப்போல நாமும் பல சந்தர்பங்களில் நம்மலால் முடியாது,நமக்கு சரிபட்டு வராது,நமக்கெல்லாம் அது ரொம்ப பெரிய விஷயம் என்ற அவநம்பிக்கையே நம்மை மேலே வர பெருந்தடையாக அமைந்துவிடுகின்றன.

என்னால் முடியும்,
இதை மீண்டுமொருமுறை முயற்சிப்பேன்,
இதில் வெற்றிபெறக்கூடிய தகுதி எனக்கு இருக்கிறது,இதை அடையாமல் நான் ஓயமாட்டேன் என்ற இடைவிடாத முயற்சி, நாம் அடையவேண்டிய இலக்கை நோக்கி வெற்றிகளோடு பயணிக்க வைக்கும்.
மொத்தத்தில் தற்போது நமக்கு தேவை ஒரு ஆழமான,அழுத்தமான நம்பிக்கை.

என்னால் முடியும்.

நன்றி : பால.ரமேஷ்.
கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture