தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி
Showing posts with label ஊர். Show all posts
Showing posts with label ஊர். Show all posts

Friday, November 22, 2019

சில ஊர்களின் பழைய பெயர்கள்

சில ஊர்களின் முழுமையான & மிக பழைய‌ பெயர்கள் .

தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது

பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது

வென்க‌ல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது

செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது

எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது

குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது

உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க அதன் தொடக்க கால பெயர் என்ன தெரியுமா?

ஒத்தை கால் மண்டபம்,ஒத்தை கால் மாந்தை இந்த பெயர்தான் உதகமண்டலம் என்று மாறியுள்ளது

ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்

விருதாச்சலம்(வடமொழி) என்ற ஊரின் உண்மையான பெயர் முதுகுன்றம்(தமிழ்) என்பதே

வேதாரண்யம் என்ற ஊரின் உண்மையான பெயர் ""திருமறைக்காடு""
வேதாரண்யம் என்பது தமிழ் சொல் அல்ல

தி. நகர் என்பது " தியாகராய நகர்" ஆகும் இதை அனைவரும் அறிந்ததே ,இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார்

கே.கே நகர் என்பது "கலைஞர் கருணாநிதி நகர்" ஆகும்

பாண்டிபசார் என்பதன் உண்மையான பெயர் "சவுந்தரபாண்டியனார் அங்காடி" என்பதே .அய்யா சவுந்தரபாண்டியனும்
நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது
மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர்,

குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை
திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்

நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும்

நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய ஊர் ஒன்று, சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது.

வானமா மலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு.

தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். 

ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ‘ஆரங்கண்ணிச் சோழன்’ என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.

மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்”
என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம் பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர்

ஏர்க்காடு

சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது.

திருகோணமலை

இறையனார் களவியலுரையில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் கொலு வீற்றிருந்த காலத்தில் பாண்டியரின் தலைநகராக இருந்த ‘கபாடபுரம்' என்று குறிக்கப் பெறுவது இன்றும் தமிழீழத்தில் உள்ள இயற்கைத் துறைமுக நகரானதிருகோணமலைதான் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குடிதனைப் பெருக்கிக்
கொடிதனை நெருக்கி வாழும்கோணமாமலை....

என்று தேவாரப் பாடல் திருகோண மலையைச் சிறப்பிப்பதும் இதை உறுதிப்படுத்தும்.
கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture