தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Saturday, August 28, 2021

Tokyo Paralympics 2020: இந்தியாவிற்கு முதல் பதக்கம் உறுதி! இறுதிப்போட்டியில் பவினா படேல்!

Tokyo Paralympics 2020: இந்தியாவிற்கு முதல் பதக்கம் உறுதி! இறுதிப்போட்டியில் பவினா படேல்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது மாற்றுத்திறனாளி வீரர்கள், வீராங்கனைகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல், இறுதி சுற்றுக்கு முன்னேறி இந்தியாவுக்கான பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

டேபிள் டென்னிஸ்

உலக நாடுகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள், வீராங்கனைகளுக்கான 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி துவங்கிய இந்த போட்டிகள், இன்று (ஆகஸ்ட் 28) 5 ஆவது நாளாக துவங்கியுள்ளது. சுமார் 54 வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி, 9 முக்கியமான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. அந்த வகையில் டோக்கியோ பாராலிம்பிக்கில் போட்டியில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை பவினா படேல் இறுதி சுற்றுக்கு முன்னேறி வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ 2ம் முறை மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைகிறார் – அதிகாரபூர்வ தகவல்!

எனினும் இவர் தங்கம் வெல்வதற்கான அதிகளவு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக டேபிள் டென்னிஸ் பிரிவின் கால் இறுதி சுற்றுக்கு தகுதியான பவினா படேல், நடப்பு சாம்பியனான பெரிச் ரன்கோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டிகள் நேற்று (ஆகஸ்ட் 27) நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 28) காலை துவங்கிய அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல், சீனாவை சேர்ந்த நம்பர் 3 வீராங்கனை ஜாங் மியாவோவை வீழ்த்தி பெண்கள் ஒற்றையர் வகுப்பு 4 பிரிவில் தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் நுழைந்துள்ளார்.

செப்.1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பவினா படேல், 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் பவினா படேலுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இறுதிப் போட்டியில் இவர் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் உறுதியாகி விடும். தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதியான இந்திய வீராங்கனை பவினா படேல், அரையிறுதி போட்டியில் தனது 100% உழைப்பை கொடுத்ததாகவும், இறுதி போட்டிக்கு மனதளவில் தயாராக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post Tokyo Paralympics 2020: இந்தியாவிற்கு முதல் பதக்கம் உறுதி! இறுதிப்போட்டியில் பவினா படேல்! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3DibWF8
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture