TN Budget 2021 Live Updates – தமிழக அரசின் இ-பட்ஜெட் தாக்கல்!
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்துள்ளார். திமுக அரசு தலைமையேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 9ம் தேதி அதிமுக அரசின் 10 ஆண்டுகால நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் கடன் சுமை உள்ளது. மேலும் நிதி பற்றாக்குறை ரூ.92,305 கோடியாக உள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுமுறை – அரசு உத்தரவு!
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் செப்.21ம் தேதி நடைபெற உள்ளது. பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 16 முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இ-பட்ஜெட் தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்…!
9.50 AM – சட்டப்பேரவைக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வருகை. இன்னும் சற்றுநேரத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
10.00 AM – தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
10.05 AM – சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜையில் உள்ள கையடக்க கணினியில் PDF வடிவில் பட்ஜெட் உள்ளது.
10.10 AM – நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து தனது உரையை தொடங்கினார்.
10.12 AM – அதிமுக உறுப்பினர்கள் பேச வாய்ப்பளிக்க படாத காரணத்தால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நிதியமைச்சரின் உரை:
- திருத்திய வரவு செலவு அறிக்கை இந்த நிதியாண்டில் எஞ்சிய 6 மாதங்களுக்கும் பொருந்தும்.
- தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம். ரேஷன் அட்டைதாரர்களுக்கு தேர்தல் வாக்குறுதியின் படி ரூ.4000 வழங்கப்பட்டு உள்ளது.
- வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் நாளை (ஆகஸ்ட் 14) தாக்கல் செய்யப்படும்.
- 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post TN Budget 2021 Live Updates – தமிழக அரசின் இ-பட்ஜெட் தாக்கல்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3sh7ph5
via IFTTT
No comments:
Post a Comment