தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Saturday, August 14, 2021

‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் STR – ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ பாணியிலான வைரல் புகைப்படம்!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் STR – ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ பாணியிலான வைரல் புகைப்படம்!

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் தோற்றத்திற்காக தனது உடல் எடையை பல கிலோ குறைத்து சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இளமை தோற்றம்:

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்திற்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இணைகிறார். இவர்களின் மூன்றாவது கூட்டணியும் வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. கவுதம் மேனன் அவரது பணியில் பெரும்பாலும் நகரத்தை சேர்ந்த கதைகளையே திரைப்படமாக்குவார்.

JEE மெயின் 2021, 4ம் கட்ட தேர்வு அட்மிட் கார்டு விரைவில் வெளியீடு – தேர்வுக்கான அறிவுறுத்தல்கள்!

ஆனால் இந்த முறை சற்றே மாறுபட்டு வெந்தது தணிந்தது படத்தை ஒரு கிராமத்து பின்னணியில் உருவாக்கி வருகிறார். இது நடிகர் சிம்புவின் 47 வது படமாக உள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இந்த படம் அமைகிறது. தாமரை படத்திற்கான பாடல்களை எழுதியிருக்கிறார். படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படம் ஆக்சன் திரில்லர் பாணியில் தயாரிக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. தற்போது படத்தில் சிம்புவின் இளவயது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதற்காக சிம்பு கிட்டத்தட்ட 15 கிலோ உடல் எடை குறைத்திருக்கிறார். இவரது மெலிந்த தோற்றத்தில் உள்ள புகைப்படம் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சிம்புவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தினை கொண்டாடி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் STR – ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ பாணியிலான வைரல் புகைப்படம்! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3xKvEFu
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture