IND vs ENG 2வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம் – வெற்றிக் கணக்கை துவக்குமா கோஹ்லியின் படை?
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று மாலை 3.30 மணியளவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆன நிலையில், முதல் வெற்றியை பதிவு செய்ய 2 அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
டெஸ்ட் போட்டி:
கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் போட்டிகள் நடைபெறுவதால் தனிமைப்படுத்துதல், பயோ பபுள் பாதுகாப்பு வளையம் என பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் நாட்டிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் 5வது நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு சற்று பிரகாசமாகவே இருந்தது. ஆனால் கடைசியில் போட்டி டிராவில் முடிவடைந்தது.
தமிழக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டண மாற்றம் – அரசு அறிவிப்பு!
இந்த போட்டியில் பந்துவீச இரு அணிகளும் அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் 40% சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்ட புள்ளிகளில் தலா 2 புள்ளிகள் குறிக்கப்பட்டது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தரவரிசையில் பாதிப்பை ஏற்படுத்தும். இன்று 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மாலை 3.30 மணியளவில் தொடங்க உள்ளது. இதில் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இங்கிலாந்து அணியை பொருத்த வரை முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதத்துடன் ஆட்டத்தை காப்பாற்றிய ஜோ ரூட் தவிர பிற பேட்ஸ்மேன்கள் யாரும் சோபிக்கவில்லை. இந்திய அணியில் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே மீது எதிர்பார்ப்புகள் அதிகளவில் உள்ளது. மறுபுறம் வேகப்பந்து வீச்சாளர் தாகூர் 2வது டெஸ்டில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளது சற்று பின்னடைவை ஏற்படுத்தும்.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post IND vs ENG 2வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம் – வெற்றிக் கணக்கை துவக்குமா கோஹ்லியின் படை? appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3yF4Wzx
via IFTTT
No comments:
Post a Comment